பயன்படுத்தப்பட்ட கார்கள் எப்படி பார்த்து வாங்குவது| How to check used cars

மாருதி 800 பயன்படுத்தப்பட்ட காரின் சிறப்பு அம்சங்கள்

பயன்படுத்தப்பட்ட கார்களை எப்படி பார்த்து வாங்குவது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக காணலாம் பயன்படுத்தப்பட்ட கார்கள் நிறைய கம்பெனி கார்கள் உள்ளன அதில் குறிப்பாக மாருதி 800 என்ற பயன்படுத்தப்பட்ட காரை எப்படி பார்த்து வாங்குவது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் உதாரணமாக கார் என்பது எல்லோருடைய கனவாக இருக்கும் அந்த வகையில் ஒரு இருசக்கர வாகனம் வாங்கும் செலவில் இந்த மாருதி 800 பயன்படுத்தப்பட்ட காரை வாங்கி பயன்படுத்தலாம் இதனை பராமரிப்பு என்பது மிகவும் குறைவு இருசக்கர வாகனத்திற்கு எவ்வளவு பராமரிப்பு செலவு ஆகும் அதே செலவு தான் இந்த மாருதி 800 பயன்படுத்தப்பட்ட காருக்கும் வரும். முதல்முறையாக முறையாக கார் ஓட்டி பழக விரும்புவோர் இந்த மாருதி 800 கார் வாங்குவதே சிறந்தது.

Highlights:
  • விலை குறைவு
  • பழுது செலவு குறைவு
  • ஒட்டி படிக்க சிறந்தது

ஏன் பயன்படுத்தப்பட்ட மாருதி 800 கார் வாங்க வேண்டும்

மாருதி 800 டீசல் பெட்ரோல் கேஸ் போன்ற எரி வாயுகளால் கார்  இயங்கும்.டீசல் மாருதி 800 காரை பொருத்தவரை இந்த பயன்படுத்தப்பட்ட கார் செலவு என்பது ரொம்ப அதிகமாக வரும்.இதில் முழுமையான பெட்ரோல் பியூர் பெட்ரோல் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் அந்த முறையான கார்களை வாங்கி பயன்படுத்துவது மிகச்சிறந்தது இதனுடைய பராமரிப்பு என்பது மாருதி 800 டீசல் காரை விட இந்த பெட்ரோல் கார் பராமரிப்பு மிக மிகக் குறைவு.
How to check used cars sales
 நீங்கள் பயன்படுத்தப்பட்ட கார் வாங்க விரும்பினால் மாருதி 800 காரில் பெட்ரோல் காரை தேர்வு செய்வது சிறந்தது.உதாரணமாக உங்களது வீட்டில் இருக்கக்கூடிய இருசக்கர வாகனத்தில் என்ன செலவு வருமோ பழுது நீக்க அதே செலவுதான் இந்த 800க்கும் வரும், இந்த மாருதி 800 கார் ஓட்ட கற்றுக் கொள்வது ஏன் என்று தெரியுமா இதில் பவர் ஸ்டியரிங் என்று சொல்லக்கூடிய அதிகத் திறன் கொண்ட ஸ்டேரிங் கிடையாது அதற்கு பதில் நார்மலான ஸ்டேரிங் மட்டுமே இருக்கும் எனவே இதை பயன்படுத்தி வாகனம் ஓட்டி படித்துவிட்டால், மற்ற வாகனங்களை ஓட்டுவது மிக மிக சுலபமாக மாறிவிடும்.எனவேதான் மக்கள் இந்த மாருதி 800 மீது அதிக நாட்டம் கொண்டுள்ளனர் . 
How to check used cars

கார் ஓட்டி  பழகுவது என்றால் இன்ஜின் மேல் பகுதியில் இருக்கும் பேனட் என்று சொல்லக்கூடிய பெரிய பகுதியாக இருக்கக்கூடிய வாகனங்களில் நாம் வண்டி ஓட்டி கற்றுக்கொள்வது சிறந்தது ஏனென்றால் சாலை மிக குறுகலாக தெரியும் மற்ற வாகனங்களில் ஒப்பிடும்போது இதன் முன்பகுதி அகலமாக இருப்பதால் நாம் இதனை ஒட்டி கற்றுக் கொண்டால் மற்ற வாகனங்களை எளிமையாக கற்றுக் கொள்ளலாம்.குறிப்பாக பழைய மாருதி 800 வாங்குவதன் காரணம் இதன் விலை அப்படி என்று எடுத்துக் கொண்டால் சாதாரணமாக 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் வரை ஒரு நல்ல சிறப்பான இன்ஜின் தரத்துடன் இருக்கும் கார்களை வாங்கிக் கொள்ளலாம். மாருதி 800 காரை நீங்கள் வாங்கிவிட்டு திருப்பி உங்களுக்கு கார் ஓட்டி பழகிய உடன் காரை விற்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் இதை நீங்கள் வாங்கிய விலையிலேயே விற்றுவிடலாம்.

பெட்ரோல் அல்லது டீசல் கார் அல்லது கேஸ் எண்டார்ஸ்மெண்ட் எது வாங்குவது

நீங்கள் பயன்படுத்தப்பட்ட மாருதி 800 கார் வாங்க விரும்பினால் அதனுடைய இன்ஜின் சத்தத்தை நன்றாக அறிந்து வாங்க வேண்டும். பெட்ரோல் காரை தேர்ந்தெடுக்கும்போது உங்களுக்கு இன்ஜினில் எந்தவிதமான பழுதும் வர வாய்ப்பு இல்லை. பயன்படுத்தப்பட்ட கார் நீங்கள் வாங்க போகும்போது ஒரு வாகனம் மட்டுமில்லாமல் இரண்டு மூன்று மாருதி 800 வாகனங்களை இன்ஜினை ஆன் செய்து இரண்டு கார் இடையே உள்ள சத்தத்தை அறிவது ரொம்ப நல்லது.இதில் முக்கியமாக இன்ஜின் பாகத்திலுள்ள மூன்று பிளக் பாயிண்ட் இருக்கும் அதில் மட்டுமே சின்னச்சின்ன சிக்கல்கள் வரும். அதை நாம் எளிதாக சரி செய்து விடலாம் இருசக்கர வாகனம் வாங்கினால் அதில் அந்த பிளக் பிரச்சனை இருந்தால் எப்படி நம்ம சரி செய்வோமோ அதே போல் இதை சரி செய்து விடலாம்.பயன்படுத்தப்பட்ட கார்களைப் பொறுத்தவரை ஆயில் கேஜ் வெளியே எடுத்துப் பார்த்தால் வெளியே ஆயில் கசிவதை நாம் அறிந்து கொள்ளலாம் அதனுடைய தரத்தையும் அறிந்து கொள்ளலாம் ,ஆனால் பெட்ரோல் கார்களில் அந்த ஆயில் கேஜ் வெளியே எடுத்து பார்க்க வேண்டிய அவசியமில்லை பயன்படுத்தப்பட்ட கார்களை பொருத்தவரை . இந்த பயன்படுத்தப்பட்ட காரில் வரும் பிரச்சனை என்று பார்த்தால் பிளக் பிரச்சனை மற்றும் பாயிண்ட் என்ற இடத்திலும் பிரச்சனைகள் வரும். இதனை இருசக்கர வாகனத்தில் எப்படி நாம் சரி செய்வோமோ அதே போல் சரி செய்தால் போதும்.கார்களில் எங்காவது பயணம் செய்து கொண்டிருக்கும் போது நமது வாகனம் இடையே நின்று விட்டால், மாருதி 800 இன்ஜின் பக்கத்தில் இருக்கக்கூடிய பிளக் கழட்டி தூசி துடைத்து திருப்பி மாட்டினால் வண்டி ரன் ஆகிவிடும்.
How to check used cars
இன்ஜின் பாகத்தில் இருக்கும் ஆயில் டேங்கில் ஆயில் கசிவு இருந்தால் வண்டியில் கசிவு ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.தினமும் காலையில் ரேடியேட்டர் பகுதியில் தண்ணீர் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும் இல்லை என்றால் அதை முழுமையாக இருக்கும்படி நிரப்பிக் கொள்ளவும் வாகனம் ஓட்டி விட்டு வந்த பிறகு எப்பொழுதும் அந்த ரேடியேட்டர் ஐ ஓபன் செய்ய வேண்டாம் அதில் இருக்கும் தண்ணீர் அதிக வெப்பத்துடன் இருப்பதால் முகத்தில் அளிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

கேஸ் எண்டார்ஸ்மெண்ட் மற்றும் பெட்ரோல் ரக மாருதி 800 அடிக்கடி வரும் பிரச்சனை என்று பார்த்தால் அதை நாம் சரி செய்வது சற்று கடினம் அதே நேரத்தில் நாம் பெட்ரோல் ரக பயன்படுத்தப்பட்ட மாருதி 800 கார் வாங்கி பயன்படுத்தினால் அதனை நாமே சரி செய்து விடலாம் எனவே தான் பெட்ரோல் கார் மாருதி 800 சிறந்தது.

பயன்படுத்தப்பட்ட கார்களில் அடி பட்டிருக்கிறதா என்பதை எப்படிப் பார்த்து வாங்குவது

மாரி 800 பயன்படுத்தப்பட்ட கார்களை பொருத்தவரை அதிக வருடங்களுக்கு முந்தைய காரர்களாக இருக்கும். அந்த காரை முந்தைய காரின் உரிமையாளர் எந்த அளவுக்கு
பயன்படுத்தியுள்ளார் ,அதில் சில சில இடங்களில் அடிபட்டிருக்கும் அதை பேஸ்ட் என்ற சொல்லக்கூடிய ஒரு கெமிக்கல் மூலமாக அதை மறைத்து அதன்மேல் பட்டிங் டிங்கிரிங் வேலை பார்த்து தான் வைத்திருப்பார்கள்.

 நிறைய பேருக்கு சென்னை வாகனம் என்றால் அதை வாங்க மறுக்கிறார்கள், அவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட கார்கள் முறையை பார்த்து வாங்க தெரியாததே இதன் காரணம். முறையாக கார்களை நாம் பார்த்து வாங்கினால் எந்த மாவட்ட வாகனம் மாநிலமாக இருந்தாலும் தாராளமாக வாங்கலாம்.

மாருதி 800 பயன்படுத்தப்பட்ட காரின் மைலேஜ் மற்றும் இதர செலவுகள்

பெட்ரோல் ரக மாருதி 800 வாகனத்தின் மைலேஜ் என்பது அதிகமாகவே கிடைக்கும்.
நீங்கள் ஒரு பயன்படுத்தப்பட்ட மாருதி 800 கார் வாங்க விரும்பினால் அதனை சிறிது தூரம் எடுத்துச் செல்கின்ற வண்டியின் ஸ்டியரிங்கில் ஏதாவது சத்தம் வருகிறதா இன்ஜினில் எந்த மாதிரி சத்தம் வருகிறது என்பதை நன்கு அறிய வேண்டும். சிறிது தூரம் ஓடி வந்த பிறகு பின்னாடி புகைகுலா யில் சரி தண்ணீர் வந்தால் வண்டி அருமையாக உள்ளது என்று அர்த்தம்

மாருதி 800 பயன்படுத்தப்பட்ட காரில் ஏசி அவசியமா

மாருதி 800 வாகனம் பொருத்தவரை  ஏசிக்கு அடக்கக்கூடிய கேஸ் எவ்வளவுதான் முழுமையாக அடைத்தாலும் ஏசி முறையாக வேலை செய்வது கிடையாது.பயன்படுத்தப்பட்ட கார்களில் ஏசி என்பது அவசியமில்லை, வருடங்கள் மாற மாற ஏசியின் தன்மையும் மாறிவிடும் .

பயன்படுத்தப்பட்ட மாருதி 800 வாகனம் புக் எப்படி பார்ப்பது

ரொம்ப வருட பழைய வாகனம் என்பதனால் இதனுடைய ஆர்சி புக் முறையாகப் பார்ப்பது சிறந்தது இதில் டூப்ளிகேட் ஆர் சி புக் தயார் செய்து விற்பனையும் செய்து விடுவர், எனவே கவனமாக ஆர்சி புக்கை பார்த்து வாங்கவும்.
How to check used cars
பயன்படுத்தப்பட்ட காரின் பின்புறம் எல்பிஜி பேங்க் இருக்கும் ஆனால் ஆர்சி புக்கில் எண்டார்ஸ்மெண்ட் செய்து இருக்காது இதனையும் கவனிக்கவேண்டும்.வண்டி வாங்கிவிட்டு எல்பிஜி RTO ரிஜிஸ்டர்  பண்ணமுடியாது.

பயன்படுத்தப்பட்ட கார்களை எப்படி முறையாக ஸ்டார்ட் செய்வது

கார்களில் சாவியை இரண்டு நேரம் ஆன் செய்வது போல கொடுத்து இருக்கும். அதில் நாம் முதல் முறை சாவியை திருகினால் வண்டியில் இருக்கக்கூடிய எலக்ட்ரிக் பொருள்கள் ஆன் ஆகும் மறுபடியும் சாவியை பெருகினால் இன்ஜின் ஸ்டார்ட் ஆகும்.
ஒரு நபர் எப்போதும் ஒரே நிமிடத்தில் இரண்டு முறை சாவியைத் திருக்கக்கூடாது. முதலில் ஆன் செய்துவிட்டு இன்ஜினுக்கு செல்லக் கூடிய சாவியைத் திருக  வேண்டும், இப்படி செய்தால் பேட்டரியின் ஆயுட்காலம் நீடிக்கும் செல்ப் மோட்டாரில் கார்ப்பரேட் பிரஸ் பழுது ஆக நேரும்.10 கிலோ மீட்டருக்கு மேல் வண்டி வாகனம் சென்றுவிட்டு வந்தால் அதனை உடனே ஆப் செய்யக்கூடாது கொஞ்சம் ரன்னிங்கில் விட்டு பிறகு ஆப் செய்ய வேண்டும்.நீங்கள் உடனே ஆப் செய்தால் சாவியில் இருக்கக்கூடிய இக்னேஷியஸ் மாற்ற நேரிடும்.

பயன்படுத்தப்பட்ட மாருதி 800 என்ன விலைக்கு வாங்கலாம்

பயன்படுத்தப்பட்ட மாருதி 800 காரின் தற்போதைய விலை என்று பார்த்தால்  ரெக்கார்ட் முடிந்திருந்தால் அதன் விலை 25 ஆயிரம் கொடுத்து வாங்கலாம் அதேசமயத்தில் ரெக்கார்ட் பண்ணி தந்தால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கும்

பயன்படுத்தப்பட்ட மாருதி 800 வாகனம் சர்வீஸ் செய்வது எப்படி

வீட்டிலேயே சர்வீஸ் செய்து கொள்ளலாம் அதற்கு உங்களுக்கு ஒரு ஷாம்பு, ஒரு பக்கெட் தண்ணீர் இருந்தால் போதும்,வண்டியின் நிறம் மாறாமல் இருக்க வண்டியினை வெயில் முகம் படாமல் மரத்தின் நிலையிலோ அல்லது அதற்காக அமைத்துள்ள கூடாரத்தில் விடுவது நல்லது.
How to check used cars
வண்டியின் மேல் பகுதியில் மழை காலங்களில் படிந்திருக்கும் நீரை உடனே ஒரு துணி கொண்டு துடைத்து எடுப்பது நல்லது இல்லை என்றால் துரு என்பது அதிகமாக மேல்பகுதியில் பிடித்துவிடும். கண்டிப்பாக ஒரு காரின் கவர் வாங்கி அதனை முறையாக பராமரிப்பது நல்லது.

முடிவுரை

இந்தப் பதிவில் மாருதி 800 பயன்படுத்தப்பட்ட கார் எப்படி பார்த்து வாங்குவது என்பதை பற்றி இதில் விரிவாக குறிப்பிட்டுள்ளோம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் மேலும் இதர வாகனங்களை எப்படி பார்த்து வாங்குவது என்பதை பற்றிய பதிவுகளை பார்க்க கீழே உள்ள நமது வெப்சைட்டில் கிளிக்செய்யுங்கள்.

இந்த பதிவை விடியோவாக பார்க்க

கருத்துரையிடுக