How to check used diesel engine cars in tamil

பயன்படுத்தப்பட்ட கார்களின் இன்ஜின் எப்படி பார்த்து வாங்குவது
டீசல் இன்ஜின் கார் எப்படி பார்த்து வாங்குவது

       பயன்படுத்தப்பட்ட காரின் இன்ஜின் எப்படி பார்த்து வாங்குவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.இன்ஜினை பொருத்தவரை டீசல் எஞ்சின் பெட்ரோல் இன்ஜின் என்று நாம் வகைப்படுத்தலாம் இன்றைய பதிவில் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்ட கார் எப்படி பார்த்து வாங்குவது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
how to buy a used car

பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும்போது இன்ஜின் பகுதியில் கவனிக்க வேண்டிய சில பகுதிகள்

  • ரேடியேட்டர் 
  • இன்ஜின் ஆயில்
  • பிரேக் ஆயில்
  • பவர் ஸ்டீயரிங் ஆயில்
  • ஆயில் கேஜ்
  • ரேடியேட்டர் பேன்
  • அப்பர் ராம்ஸ்
  • ரப்பர் பேடிங்

how to check rediater
ரேடியேட்டர் 
     பயன்படுத்தப்பட்ட கார்களை ஒரு வியாபாரி இடமோ அல்லது நேரடி கார் விற்கும் நபரிடமோ வாங்கினாலும் சரி முதலில் இன்ஜின் பகுதியில் ரேடியேட்டரில் தண்ணீர் அளவு சரியாக இருக்கிறதா என்பதை முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
how to check engine oil

இன்ஜின் ஆயில்
        இன்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கு முன்னாடி இன்ஜின் ஆயில் எவ்வளவு இருக்கு என்பதை பார்க்க வேண்டும் அதற்கு ஆயில் கேஜ் என்ற ஒரு லிவர் கொடுத்திருப்பார்கள் அதை வெளியே எடுத்து அதில் இரண்டு புள்ளிகள் இருக்கும் அதில் எவ்வளவு ஆயில் இருக்கிறது என்பதை அதன் மூலம் அறிந்துகொள்ளலாம் குறைவாக இருந்தால் அதனை முழுவதுமாக நிரப்பிய பின் வாகனத்தை எடுப்பது நல்லது.மீண்டும் ஆயிலின் தரம் எவ்வாறு உள்ளது என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும் ஆயில் கெட்டித்தன்மை யுடன் சற்று வளவளப்புத் தன்மையுடன் இருந்தால் நல்லது நிறம் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும் இல்லை அதற்கு பதில் மாற்றாக தூய கருப்பு நிறத்தில் இருந்தால் அது இன்ஜின் வேலை உள்ளது என்று அர்த்தம்.

பிரேக் ஆயில்
         பிரேக் ஆயில் சரியாக உள்ளதா என்பதையும் பார்க்கவேண்டும். பிரேக் ஆயில் இல்லை என்றால் பிரேக் பிடிப்பது சற்று கடினம் எனவே அதனையும் எவ்வளவு இருக்கிறது என்பதை முறையாக பார்க்க வேண்டும்.
how to check powersteering oil

பவர் ஸ்டீயரிங் ஆயில்
       பவர் ஸ்டீயரிங் ஆயில் எவ்வளவு இருக்கிறதே என்பதனையும் பார்க்க வேண்டும் ஏனென்றால் பவர் ஸ்டேரிங் என்பதால் ஆயில் இல்லை என்றால் திருப்புவது சற்று கடினம் சில சமயங்களில் சத்தம் அதிகமாக வரும் அதனால் முறையாக அந்த ஆயில் அளவை பார்ப்பது மிகவும் நல்லது. பவர் ஸ்டீயரிங் ஆயில் குறைவாக இருந்தால் நீங்கள் இன்ஜினை ஸ்டார்ட் செய்து வண்டியை மு செய்யும்போது ஸ்டேரிங் திருப்பும்போது சின்ன சின்ன சத்தம் வரும்.அப்படியே சத்தம் வந்தால் ஸ்டீரிங்  ஆயில்முழுவதுமாக நிரப்பிய பின்னும் இதே சத்தம் திரும்ப வந்தால் கீழே மோட்டாரில் பிரச்சினை இருக்கிறது என்பதை அறியலாம்.
how to check oil gaj

ஆயில் கேஜ்
        வண்டியை ஸ்டார்ட் செய்து சிறிது தூரம் சென்று வர வேண்டும் அவ்வாறு சென்று வந்தபின் இன்ஜின் ஐயோ வண்டியையோ நிறுத்தாமல் இஞ்சின் பகுதியைத் திறந்து ஆயில் கேஜ் இவரை திரும்ப வெளியே எடுத்து பார்க்க வேண்டும் அப்போது ஆயுளும் வெளியே தள்ளும் புகையும் வெளியே தள்ளினாள் .ஆயில் மட்டும் வெளியே தள்ளினால் பிரச்சனை இல்லை புகையும் வெளியே தள்ளினால் இன்ஜினில் தன்மை 60% தான் இருக்கும். இது டாட்டா  கார் களுக்கு மிகவும் பொருந்தும்.
oil level

ரேடியேட்டர் பேன்
        ரேடியேட்டர் பேன் எவ்வளவு ஓடுகிறது என்பதையும் பார்க்க வேண்டும் அதுதான் இன்ஜினின் தன்மையை நிர்ணயிக்கும்
upper aarms

அப்பர் ராம்ஸ்
        பயன்படுத்திய கார் அடி பட்டிருக்கிறதா என்பதை எவ்வாறு பார்ப்பது
ஒரு வாகனம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வாகனம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது எங்காவது சிறிய விபத்தை சந்தித்த இருந்தால் முதலில் அடி வாங்குவது இஞ்சின் பகுதிதான் அதில் முன்பகுதியில் அப்பரம் ஆம்ஸ் என்று சொல்லக்கூடிய இன்ஜினின் மொத்த வண்டியின் உயிர்நாடி என்று சொல்லலாம் .அந்தப் பகுதி அடிவாங்கி நொருங்கி இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அதில் சில புள்ளிகள் இருக்கும். அந்தப் புள்ளிகள் கம்பெனி முத்திரைகள் போல செயல்படும் அதை மாற்ற முடியாது அதில் வெல்டிங் வேலை செய்தால் ஈசியாக கண்டுபிடித்துவிடலாம்.
ஒரு பயன்படுத்தப்பட்ட காரின் முன்பகுதி அடி வாங்கி இருந்தால் முன்பகுதியில் தூம் என்று சொல்லக்கூடிய பகுதியை மாற்றி மாற்றி விடலாம் ஆனால் இந்த அக்பர் ஆம்ஸ் என்று சொல்லக்கூடிய பகுதியை மாற்றுவது கடினம். அப்படியே வெல்டிங் ஒர்க் பார்த்து மாற்றி இருந்தாலும் அதனை அந்தப் புள்ளிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம்.
door rubber feeding

ரப்பர் பேடிங்
        பயன்படுத்தப்பட்ட காரின் நான்கு கதவுகளிலும் நிலையை எப்படி அறிவது
பயன்படுத்தப்பட்ட கார்களின் அடிபட்டிருந்தால் சைடு பகுதிகளில் எளிதாக கண்டுபிடித்து விடலாம் நான்கு பக்கம் இருக்கக்கூடிய கதவுகளை திறந்து அதன் கண்ணாடிகளை இறக்கிவிட்டு ரப்பர் பகுதியினால் பிடிங் என்று சொல்வார்கள் அதனை வெளியே பிதுங்கி பார்த்து அந்த இடத்தில் அந்த இடத்தில் கம்பெனியின் புள்ளிகள் இல்லாமல் ஒரு சில வேலைகள் பார்த்து அந்த புள்ளியை கொண்டு வர முடியாது எனவே அந்தப் புள்ளிகளை வைத்து நான்கு பக்க கதவுகளையும் மாற்றி இருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம்.எனவே நான்கு கதவுகளையும் திறந்து அந்த பிடிங் பகுதியினை திறந்து பார்த்து சின்ன வேலை கூட செய்திருந்தால் அதனை கண்டுபிடித்து விடலாம். வாகனத்தின் பின் பகுதியில் அடி பட்டிருந்தாலும் இதேபோல் டிக்கி பகுதியில் வெளியே எடுத்துப் பார்த்தால் கண்டுபிடித்து விடலாம்.

சீட் எவ்வாறு இருக்கிறது சீட் கவர் எவ்வாறு இருக்கிறது
seat cover

          சீட் கவர் சீட் இரண்டைப் பொறுத்தவரை அதில் உட்கார்ந்து பார்த்தால் கண்டுபிடித்துவிடலாம் அதிலுள்ள குசன் சரியாக இருக்கிறதா. உட்கார்ந்து பார்ப்பதன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.சீட்டின் அடிப்பகுதியில் யாரும் கவனிக்கத் தவறுகின்றனர் எனவே நீங்கள் பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும் பொழுது முறையாக சீட்டின் அடிப்பகுதியில் கைகளை விட்டு அறிவு இருக்கிறதா என்பதனை கவனமாகப் பார்க்கவும், நாம் பயன்படுத்த கட்டார் மேல் பாகத்தை பார்த்து வாங்கிவந்து விடுகிறோம் ஆனால் அதில் இருக்கக்கூடிய சின்னச்சின்ன பகுதிகளையும் முறையாகப் பார்ப்பது நமது வாகனம் வாங்கிய பிறகு வரும் செலவுகளை குறைக்க பெருமளவு உதவும்.

பயன்படுத்தப்பட்ட காரின் அடிப்பகுதியை எவ்வாறு பார்த்து வாங்குவது

          ஒரு பயன்படுத்தப்பட்ட கார் வாங்குகிறீர்கள் என்றால் அதன் அடிப்பாகம் எவ்வாறு இருக்கிறது என்பதனை முதலில் பார்க்க வேண்டும் ஏனென்றால் அந்தப் பகுதியில் பகுதியில்தான் அடிக்கடி தண்ணீர்  சேர் அதிகம் படுவதனால் அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.அதனை நாம் கவனிக்கத் தவறினால் பின்னர் வாகனம் வாங்கிய பிறகு அதிகமாக செலவு வர வாய்ப்பு இருக்கிறது. எனவே முறையாக வாகனம் வாங்கும் போது ஒரு சர்வீஸ் சென்டரில் கொண்டு வாகனத்தை விட்டு அதன் அடிப்பாகத்தில் இறங்கி பார்த்தால் கண்டுபிடித்து விடலாம்.சென்னை வாகனம் என்றாலே நிறைய பேர் பயப்படக் காரணம் மழை வெள்ளம் வந்த காரணத்தினால் பாதிப்புக்கு உள்ளாகிய நிறைய கார்கள் விற்பனைக்கு வந்துள்ளது என்பதற்காக மட்டுமே நாம் இதனை முறையாக பார்த்து வாங்கி விட்டாள் சென்னை வாகனம் என்ற கவலையே வேண்டாம்.

வாகனத்தின் பெயிண்ட் எப்படி உள்ளது என்பதை கண்டுபிடிப்பது

        ஒரு பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பெயிண்ட் திரும்ப பண்ணி இருக்கிறார்களா என்பதனை கண்டுபிடிப்பது சற்று சிரமம் என நிறையபேர் கூறியிருப்பார்கள் ஆனால் நாம் வாகனத்தின் மேல் கைகளை வைத்து தேய்ப்பதால் தெரிந்துவிடும் அது எப்படி என்றால் சர சர வென இருந்தால் அது திரும்ப அளிக்கப்பட்டுள்ளது அதற்கு பதில் வளவளப்பு தன்மையுடன் இருந்தால் அதே கம்பெனியின் பெயிண்ட் அந்த பினிஷிங் நிறைய சர்வீஸ் சென்டரில் கிடைப்பது கிடையாது.மெய் பகுதியோ அல்லது சைட் பகுதியையோ தட்டி பார்ப்பதன் மூலம் சத்தத்தை கேட்டு அறிந்துவிடலாம் பேஸ்ட் வைத்திருக்கிறார்களா என்பதனை, எனவே பயன்படுத்தப்பட்ட கார்களில் பெயிண்ட் என்பது இவ்வாறு பார்த்து அறியலாம்.

காரின் உடைய ரன்னிங் போர்டு அரிப்பு இருக்கிறதா என்பதை பார்ப்பது எப்படி

           பயன்படுத்தப்பட்ட காரின் அடிப்பகுதியில் ரன்னிங்போர்டு போயிருக்கும் அதில் அடிப்படை இருக்கிறதா என்பதனை முறையாக பார்க்க வேண்டும் ஏனென்றால் அடிக்கடி வண்டி சென்று கொண்டிருக்கும் பொழுது கற்கள் மற்றும் நாம் சர்வீஸ் செய்யும்போது இருக்கக்கூடிய தண்ணீர் எல்லாமே இவற்றில்தான் தங்கும் எனவே அதில் அரிப்பு இருக்கிறதா அவ்வாறு இருந்திருந்தால் அதனை எவ்வாறு பேஸ்ட் வைத்து அதன் மேல் எவ்வாறு பெயிண்ட் அடித்து இருக்கிறார்கள் என்பதனையும் பார்த்துக் கொள்ளலாம்.

        பயன்படுத்தப்பட்ட காரின் பெட்ரோல் இன்ஜின் எவ்வாறு பார்த்து வாங்குவது என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம் பெட்ரோல் வாகனத்தை பொருத்தவரை ஆயில் கேஜ் வெளியே எடுத்துப் பார்த்தாலும் ஆயில் வெளியே தள்ளுவது கிடையாது அதனை எவ்வாறு பார்த்து வாங்குவது என்பதை பற்றி அடுத்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்

டீசல் இன்ஜின் கார் வாங்கலாமா வேண்டாமா

         டீசல் இன்ஜின் காரைப் பொறுத்தவரை உங்களது தேவைக்கு ஏற்ப இந்த காரை வாங்கி கொள்ளலாம் அடிக்கடி நீங்கள் வாகனம் எடுத்துப் பயன்படுத்துவர் என்றால் நீங்கள் டீசல் இன்ஜின் காரை தாராளமாக எடுக்கலாம் எப்பவாவது தான் வாகனம் எடுப்பீர்கள் என்றால் நீங்கள் தாராளமாக பெட்ரோல் காரை தேர்ந்தெடுக்கலாம்.
how to check used car

        இன்றைய பதிவில் டீசல் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் இன்ஜின் அடிபட்ட கார்கள் எவ்வாறு பார்ப்பது என்பதனை இந்தப்பதிவில் பதிவிட்டிருக்கிறேன் இது உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன் இதனைப் போலவே உங்களுக்கு ஏதாவது பயன்படுத்தப்பட்ட கார் எவ்வாறு பார்ப்பது என்று தெரியவில்லை என்றால் அதனை கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள் அதனைத்தொடர்ந்து உங்களுக்கான பதிவு பதிவிடுகிறேன்.



4 கருத்துகள்

கருத்துரையிடுக