HOW TO CHECK SANTRO IN TAMIL USED CAR BUYING TIPS


சான்ட்ரோ பயன்படுத்தப்பட்ட கார் எப்படி பார்த்து வாங்குவது

சான்ட்ரோ கார் எப்படி பார்த்து வாங்குவது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்,அதிகமான மக்கள் மாருதி 800 பயன்படுத்தப்பட்ட கார்களை விரும்புவார் அதற்கு அடுத்தபடியாக சான்ட்ரோ ரக கார்களை விரும்புவர் . சான்ட்ரோ பயன்படுத்தப்பட்ட காரின் மைலேஜ் என்பது அதிகமாக கிடைக்கும் . சாண்ட்ரோ பயன்படுத்தப்பட்ட காரின் விலை மிகக் குறைவாக இருக்கும் அந்த காரை பராமரிப்பதும் மிகவும் எளிமையானது எனவேதான் சான்ட்ரோ பயன்படுத்தப்பட்ட காரை அனைவரும் விரும்புகின்றனர்.

சான்ட்ரோ காரின் மிக முக்கிtய அம்சங்கள்

  • விலை மிகக் குறைவு
  • பராமரிப்பு மிக எளிது
  • மைலேஜ் திறன் அதிகம்

காரின் ஆயில் பற்றிய விவரங்கள்

  • பிரேக் ஆயில்
  • பவர் ஸ்டேரிங் ஆயில்
  • கூலன்ட் ஆயில்
காரின் முன்பகுதியில் இன்ஜின் பகுதியில் இருக்கக்கூடிய பிரேக் ஆயில் பவர் ஸ்டேரிங் ஆயில் கூலன்ட் ஆயில் குறைவாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் . சில வாகனங்களில் பவர் ஸ்டீயரிங் ஆயில் க்கு பதிலாக சென்சார் கட்டவுட் அப்படின்னு  கொடுத்திருப்பார்கள் அதில் சின்ன சின்ன பேட்டரி செல்கள் இருக்கும் . அதை களில் ஏதேனும் வேலை செய்யவில்லை என்றாலும்  ஸ்டியரிங்கில் பிரச்சினை வரும். முக்கியமாக பிரேக் ஆயில் குறைவாக இருந்தால் அதனை தயவுசெய்து அதிகப்படுத்திக் கொள்ளவும். தவறினால் பிரேக் பிடிப்பதற்கான வாய்ப்பு என்பது குறைவாக இருக்கும். மனிதனுக்கு ரத்தம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் வாகனத்திற்கு ஆயில் என்பது மிக முக்கியம்.

ஆர்சி புக் எப்படிப் பார்த்து வாங்குவது

  • வாகனத்தின் உரிமையாளர்
  • வாகனத்தின் ரிஜிஸ்டர் நம்பர்
  • வாகனத்தின் சேஸ் நம்பர்
  • வாகனத்தின் வருடம்
  • வாகனத்தின் நிறம்
  • வாகனத்தின் இன்சுரன்ஸ்
ஒரு வாகனம் என்று எடுத்துக்கொண்டால் எப்பொழுதும் அதன் உரிமையாளர் எத்தனை பேர் என்பதை கவனிக்க வேண்டும் இரண்டாவது அந்த வாகனம் எந்த மாவட்டத்தில் எந்த ஆர்டிஓ ஆபீஸ் இல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் மூன்றாவது வாகனத்தின் முன் பாகத்தில் இஞ்சின் பக்கத்தில் இருக்கும் பம்பரில் சேஸ் நம்பர் பதிவு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். வாகனத்தின் உரிமையாளர் சொன்ன வருடமும் அந்த அந்த ஆர்சி புக்கில் இருக்கும் வருடமும் ஒரே போல இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் . வாகனத்தின் நிறம் நீங்கள் பார்க்கும் நிறம் மாதிரியே ஆர்சி புக்கில் பதிவு செய்திருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். வாகனத்திற்கான இன்சூரன்ஸ் பக்கங்கள் இருக்கிறதா அதன் நிலை என்ன இவை அனைத்தையும் முறையாக பார்க்க வேண்டும்.
இந்த சான்ட்ரோ பயன்படுத்தப்பட்ட காரை பொருத்தவரை சேஸ் என்ற சொல்லக்கூடிய நம்பரை முறையாக பார்ப்பது சிறந்தது. நீங்கள் பழைய வாகனம் வாங்கினால் முதலில் வண்டியில் இருக்கக்கூடிய ஆயில்கள் அனைத்தையும் மாற்றி விடுவது சிறந்தது.

சான்ட்ரோ பயன்படுத்தப்பட்ட காரில் வரும் சில பிரச்சினைகள்

அதிகமாக சான்ட்ரோ பயன்படுத்தப்பட்ட காரில் வரும் பிரச்சினை என்று பார்த்தால்  பியூர் பெட்ரோல் வாகனத்தை பொருத்தவரை இன்ஜின் பகுதியில் இருக்கும் 4 பிளக் இருக்கும். இந்த நான்கு பிளக்கில் தான் பிரச்சனை வரும். இதனை சரி செய்வது எளிது. இந்த பிளக் பிரச்சினை இருப்பதை எப்படி அறிவது என்றால் வாகனம் ஆக்சிலேட்டர் கொடுத்தால் டிப் டிப் எனவும் திருதிருவென வண்டி ஓடும் இதனை  வைத்து பிரச்சினை என்பதை அறிந்து கொள்ளலாம்.இதே பிரச்சினை கார்ப்பரேட்டுகள் பெட்ரோல் சரியாக இயங்கவில்லை என்றாலும் இதேபோல் வண்டி சத்தம் மாறும்.

சான்ட்ரோ பயன்படுத்தப்பட்ட கார் டீசல் அல்லது பெட்ரோல் எதை வாங்குவது

பெட்ரோல் வண்டியை பொருத்தவரை ஆயில் கேஜி ஆக்சிலேட்டரை மிதித்து பின்னர் அதை வெளியே எடுத்துப் பார்த்தாலும் ஆயில் வெளியே கிடையாது. எனவே ஆயில் கேஜி வெளியே எடுத்துப் பார்த்து இந்த வண்டியை தரம் அறிய முடியாது. அதற்குப் பதில் இன்ஜின் பிரச்சனை இருக்கிறதா என்பதை அறிய ரேடியேட்டர் ஐ திறந்து பார்த்து வாட்டர் லெவல் சரியாக இருக்கிறதா என பாருங்கள், பின்னர் ரேடியேட்டர் மூடியை திறந்து வைத்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து ஆக்சிலரேட்டரை கொடுக்கவும். இப்பொழுது ரேடியேட்டரில் இருக்கும் தண்ணி வெளியே சிதறினால் இன்ஜினில் தலையாய வேலை உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். பெட்ரோல் வண்டியை பொருத்தவரை அதனுடைய ஆயிலின் நிறம் இளம் பழுப்பு நிறத்திலிருந்து கறுப்பு நிறமாக மாறுவது இல்லை அதற்கு பதில் அதில் பசைத் தன்மை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.ஆயிலில் தண்ணியும் கலந்து வெள்ளை நிறத்தில் ஆயில் இருந்தால் இன்ஜினில் வேலை உள்ளது என்பதை அறியலாம். பயன்படுத்தப்பட்ட கார்கள் வாங்கும் பொழுது பெட்ரோல் காராக இருந்தால் வெளியே எடுத்துப் பார்த்து அதில் ஆயில் லெவல் 2 புள்ளிகள் இருக்கும் அதில் முதல் புள்ளிக்கு கீழே இருந்தால் ஆயில் மாற்றுவது சிறந்தது

வண்டி அடி பட்டிருக்கிறதா சென்னை வண்டியா என்று பார்ப்பது எப்படி

வாகனத்தின் முன் பகுதியில் இன்ஜின் பகுதியை திறந்து பார்த்தாள் அப்பர் ஆம்ஸ் என்ற பகுதியில் சின்ன கோடு இருக்கும். அந்தக் கோடு உண்மையான கோடு வா என்பதை பார்க்க வேண்டும்.வாகனத்தின் அனைத்து பகுதியையும் மாற்றி விடலாம் ஆனால் இந்த அப்பரம் சென்ற சொல்லக்கூடிய இந்தப் பகுதியில் அடிபட்டால் மாற்றுவது கடினம். அந்த பகுதியில் வெல்டிங் வேலை செய்தாலும் தெரிந்துவிடும் அதில் சிறிய சிறிய புள்ளிகள் இருக்கும் அதுதான் உண்மையான வாகனத்தின் பகுதி என்பதை அறிய வாய்ப்பு. சின்ன சின்ன அரிப்புகள் இருந்ததால் அதன் மேல் பேஸ்ட் வைத்து மறைத்து பெயிண்ட் அடித்து வைத்திருப்பார்கள். அதை எவ்வாறு கண்டு பிடிப்பது என்றால் தட்டிப் பார்த்தால் தகரம் போல் சத்தம் கேட்டால் பேஸ்ட் வைக்கவில்லை அதற்குப் பதில் மெத் மெத் என்ன சத்தம் கேட்டால் பேஸ்ட்  வைத்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.
பெயிண்ட் டச்சப் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது வாகனத்தை மெதுவாக தடவிப் பார்த்தால் சரசர என்று இருந்தால் அந்த இடத்தில் பெயிண்ட் அடித்து இருக்கிறார்கள் என்று அர்த்தம் வளவளப்பு தன்மை குறையாமல் இருந்தால் அது வாகனத்தின் ஒரிஜினல் பெயிண்ட் என்பதை அறியலாம்.
வண்டியின் நான்கு கதவுகளிலும் இருக்கும் கண்ணாடி பிடிங் பகுதியில் ரப்பர் பிடிங் வெளியே எடுத்துப் பார்த்தால் அதிலிருக்கும் பில்லர்ஸ் அடி பட்டிருக்கிறதா என்பதை பார்க்கலாம் குறிப்பாக அதிலும் சின்ன சின்ன  புள்ளிகள் இருக்கும் அந்தப் புள்ளிகள் வாகனத்தின் கம்பெனி புள்ளிகள், இந்த ஒரிஜினல் புள்ளிகள் யாராலும் திரும்ப வேலை பார்த்துக் கொண்டு வர முடியாது.

வாகனத்தின் கண்ணாடி எப்படி பார்ப்பது

வாகனத்தின் கண்ணாடியில் வருடம் மற்றும் மாதம் பொறிக்கப்பட்டிருக்கும். அதேபோல் அந்த நிறுவனத்தின் பெயரும் இடம் பெற்றிருக்கும் அதனை முறையாக பார்க்க வேண்டும் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனம் வாங்கும்போது இந்த கண்ணாடியைப் பார்ப்பது சிறந்ததாக இருக்காது ஏனென்றால் வைப்பர் என்று சொல்லக்கூடிய இடத்தில் சின்ன சின்ன கற்கள்  இருந்தாலும் கண்ணாடி சேதாரம் ஆயிருக்கும் மாற்றி இருப்பார்கள். அதிக நேரம் வாகனத்தை வெயிலில் நிறுத்திவிட்டு பின்னர் மழைத்துளிகளில் அல்லது தண்ணீர் ஊற்றி கிடைப்பதனால் கீறல்கள் வர வாய்ப்பு உள்ளது.

சான்ட்ரோ வாகனத்தின் சாவி தேய்மானம் பற்றிய தகவல்கள்

சாண்ட்ரோ வாகனத்தை பொருத்தவரை அடிக்கடி சாவி லாக் இடத்தில் சாவி தேய்வு அதிகம் ஏற்படும் காரணம் சாவியில் கீ செயின் இதர பொருள்கள் அதில் அணிவதால் சாவியின் இக்னேஷியஸ் தேய்மானம் ஆகிறது இதனால் இந்த மாதிரி அணிவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.சான்ட்ரோ அல்லாது பிற வாகனங்களிலும் இதேபோல் செய்வது சிறந்தது.

செக்கிங் லைட் என்றால் என்ன

செக்கிங் லைட் என்பது வண்டியின் ஸ்டீரிங் பக்கத்தில் இருக்கும் ஒரு மீட்டரில் எரியும் ஒரு விளக்கு அந்த விளக்கு அதிகபட்சம் ஒரு கிலோ மீட்டர் சென்றதும் தானாகவே ஆஃப் ஆகிவிடும் அப்படி ஆகவில்லை என்றால் வண்டியில் சென்சார்போர்டு அல்லது இன்ஜினில் பிரச்னை உள்ளது என்று அர்த்தம் குறைந்தது ஐந்து கிலோமீட்டர் சென்று பார்ப்பது நல்லது. அவ்வாறு லைட் எரிந்து கொண்டே இருந்தால் ஒரு சிறந்த மெக்கானிக் கொண்டு அதனை சென்சார் போர்டை செட் செய்வது நல்லதுசிறந்த மெக்கானிக் என்றால் அதனை டாப் மூலம் அளவீடு செய்து சென்சார் லைட் எரியவில்லை என்பதை கண்டுபிடித்து விடுவார்.

பீஸ் பாக்ஸ் என்றால் என்ன

பீஸ் பாக்ஸ் என்பது ஹெட்லைட் முதல் இன்ஜினின் அனைத்து பாகங்களுக்கும் சென்சார் வொர்கிங் மூலம் வேலைகளை பார்ப்பது இதன் வேலை. உங்களுக்கு என்ன எலக்ட்ரானிக்கல் சம்பந்தமா பிரச்சினை இருந்தாலும் இந்த பீஸ் பாக்சை முதலில் செக் செய்து பீஸ் மாற்றுவது நல்லது

சாண்ட்ரோ  பயன்படுத்தப்பட்ட  கார் என்ன விலைக்கு வாங்கலாம்

சாண்ட்ரோ பயன்படுத்தப்பட்ட காரை பொருத்தவரை 2007 2008 என்ற மாடல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வரை சொல்வார்கள் அதனை குறைத்து பேசுவது மிகவும் நல்லது இதுதான் மார்க்கெட் விலை உங்களினால் பேச்சுத் திறமை இருந்தால் இன்னும் இந்த விலையில் இருந்து தள்ளுபடி பெறலாம்

சான்ட்ரோ பயன்படுத்தப்பட்ட கார் வாங்கலாமா

தாராளமாக சான்ட்ரோ பயன்படுத்தப்பட்ட காரை வாங்கலாம் நடுத்தர குடும்பத்திற்கு ஏற்ற வாகனம் இந்த சான்ட்ரோ பயன்படுத்தப்பட்ட கார் இதன் விலையை குறைத்து வாங்குவது மிகவும் நல்லது அதனுடைய இஞ்சின் தரத்தையும் பார்ப்பது மிகவும் நல்லது மேலும் இதுபோன்ற கார் வாங்கலாமா வேண்டாமா என்ன தகவல் வேண்டுமோ நம்முடைய வெப்சைட்டில் நீங்கள் தொடர்ந்து பதிவைப் பார்க்கலாம்





கருத்துரையிடுக