ஆமினி பயன்படுத்தப்பட்ட கார்கள் எப்படி பார்த்து வாங்குவது | how to check Omni used cars

ஆம்னி பயன்படுத்தப்பட்ட கார் எப்படி பார்த்து வாங்குவது

        ஆம்னி பயன்படுத்தப்பட்ட கார் எப்படி பார்த்து வாங்குவது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் விரிவாகப் பார்க்கலாம் ஆம்னி கார்களை அதிகம் விரும்புவதற்கு காரணம் நடுத்தர குடும்பத்திற்கு ஏற்ற ஒரு தொழில் செய்யக்கூடிய நபர்கள் அதிகம் விரும்பும் வாகனம் என்று பார்த்தால் அது ஆம்னி கார் தான் அதிலும் குறிப்பாக பயன்படுத்தப்பட்ட ஆம்னி கார் வாங்குவதற்கான காரணம் அதன் விலையும் குறைவாக தான் இருக்கும் ஆம்னி காரை பொருத்தவரை மைலேஜ் என்பதும் அதிகமாகவே கிடைக்கும். ஆம்னி கார்களைப் பொறுத்தவரை பெட்ரோல் மற்றும் எல்பிஜி ஆகிய எரி வாயுக்கள் மூலம் இயங்கும். பெரும்பாலும் வியாபாரிகள்  ஆம்னி பயன்படுத்தப்பட்ட கார் களையே விரும்புவர்.
TAMIL24CARS


ENGINE TYPE

  • MAFI
  • CORPARATE


ஆம்னி கார்களில் MPFI இன்ஜின் வாங்குவது சிறந்ததா இல்லை CORPARATE இன்ஜின் வாங்குவது சிறந்ததா

          ஆம்னி கார்களைப் பொறுத்தவரை இரண்டு வகையான இன்ஜின்கள் வரும் MPFI இன்ஜின் Corparate இன்ஜின். 2005 மாடல்கள் அந்த வருடங்களில் இருக்கக்கூடிய மாடல்களுக்கு கார்ப்பரேட் இன்ஜின் டைப் தான் வரும். அவ்வாறு நீங்கள் பழைய மாடல்கள் எடுத்தாள் அந்த கார்ப்பரேட் இன்ஜின் தான் வரும் அவ்வாறு வாங்கினால் பியூர் பெட்ரோல் மூலமே வண்டியை இயக்கவும். மாற்றாக LPG மூலம் வண்டியை இயக்க வேண்டாம் இன்ஜினில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.நீங்கள் வாங்குகின்ற வாகனங்களில் பியூர் பெட்ரோல் மட்டும் எல்பிஜி கேஸ் எண்டார்ஸ்மெண்ட் உடன் இருந்தாள் மாற்றி மாற்றி வாகனம் இயக்குவதை தவிர்க்கவும் பெட்ரோல் மூலம் இயக்கவும். நீங்கள் அதிகமாக தூரம் பயணம் செய்யும்போது  கேஸ் மூலம் இயக்கி விட்டு திடீரென பெட்ரோலுக்கு மாறினால் வாகனம் இடையில் நிற்பதற்கான வாய்ப்பு உள்ளது இதற்கு காரணம் இந்த பழைய ரக கார்ப்பரேட் இன்ஜின் தான். 

      ஆம்னி கார்கள் வாங்கும்போது அது CORPARATE இன்ஜினை அல்லது MPFI இன்ஜின் என்பதைப் பார்த்து வாங்கவும் ஏனென்றால் மிகவும் சிறந்தது.
TAMIL24CARS

      நீங்கள் ரொம்ப பழைய மாடல் மாடல் ஆம்னி வாங்குகிறீர்கள் என்றால் பியூர் பெட்ரோல் உள்ள வாகனம் மட்டும் வாங்குங்கள் கேஸ் உடன் சேர்த்து வாங்கினால் கேஸ் இயக்குவதை தவிர்த்து விட்டு முழுவதுமாக பெட்ரோல் மட்டும் வைத்து இயக்கவும். ஏனென்றால் இதனுடைய இன்ஜின் கார்ப்பரேட் இன்ஜின்.

       அவ்வாறு இரண்டும் மாற்றி மாற்றி இயக்கினால் வாகனத்தின் எரிபொருள் இரண்டும் கலவை ஆகிவிடும் அதை நம்மால் சரி செய்ய இயலாது அதற்கு முறையான மெக்கானிக் மூலம் சரிசெய்ய வேண்டிய நிலை வரும்.

MPFI இஞ்சின் சிறந்ததா

        பயன்படுத்தப்பட்ட ஆம்னி கார்களைப் பொறுத்தவரை MPFI இன்ஜின் நீங்கள் வாங்கினால் நீண்ட தூரம் பயணத்தின்போது LPG இலிருந்து பியூர் பெட்ரோலுக்கு மாற்றினாலும் எந்தவித பிரச்சினையும் வராது வண்டியும் இடையில் நிற்காது. எனவே பயன்படுத்தப்பட்ட ஆம்னி கார் வாங்குபவர்கள் 2010 மாடலுக்கு மேல் MPFI இன்ஜின் எடுப்பது சிறந்தது.

       சின்ன சின்ன தொழில்முனைவோர்கள் அதிக முதலீடு இல்லாமல் தொழில் துவங்க நினைப்போர் பழைய மாடலான கார்ப்பரேட் இன்ஜின் உள்ள பயன்படுத்தப்பட்ட ஆம்னி கார்களை வாங்கலாம். ஆனால் அதில் பியூர் பெட்ரோல் மட்டும் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்குங்கள்.

       நீங்கள் பயன்படுத்தப்பட்ட ஆம்னி கார் வாங்கும்போது குறிப்பாக ஆர்சி புக்கில் கேஸ் எண்டார்ஸ்மெண்ட் பதிவு செய்து இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும் இல்லை என்றால் வாகனம் விற்பவரிடம் அதை பதிவு செய்யுமாறு செய்து தருமாறு கேட்டுக் கொள்ளவும் இதற்கு ஒரு தொகை செலவாகும் .எனவே அவரிடம் இருந்து வாங்கும்போது அவரையே மாற்றித் தர சொல்வது மிகவும் சிறந்தது.
TAMIL24CARS

பயன்படுத்தப்பட்ட கார்களில் LPG கேஸ் எவ்வாறு பயன்படுத்துவது

        வீட்டில் உபயோகப்படுத்தும் எல்பிஜி சிலிண்டர் நீங்கள் வந்து பயன்படுத்தலாம். அவ்வாறு வீட்டு சிலிண்டரை பயன்படுத்தினால் ஒரு சிலிண்டர் பயன்படுத்தும்போது 350 கிலோ மீட்டர் வரை மைலேஜ் என்பது கொடுக்கும். சின்னச்சின்ன வியாபாரத்துக்கு நீங்கள் பயன்படுத்தும் பொழுது சாலைகள் மிக மோசமான சாலைகளில் பயணம் செய்யும் போதும் இதனுடைய கிலோ மீட்டர் என்பது சற்று குறையும் 300 முதல் 300 க்கும் கீழே குறையும்.MPFI இன்ஜின் எடுத்தாள் எவ்வளவு கிலோ மீட்டருக்கு மைலேஜ் கிடைக்கிறது LPG சிலிண்டர் மூலம் பயன்படுத்தினால் எவ்வளவு கிலோமீட்டர் கிடைக்கிறது என்பதை கணக்கு எடுத்துக் கொள்ளவும்.

பெட்ரோல் ரக வாகனம் எடுத்துவிட்டு எல்பிஜி எண்டார்ஸ்மெண்ட் திரும்ப இணைக்க முடியுமா

          இப்போது உள்ள தற்காலத்தில் பெட்ரோல் ரக வாகனம் எடுத்துவிட்டு அதனை LPG எண்டார்ஸ்மெண்ட் உடன் RC புக்கில் இணைப்பது கடினம். கேஸ் டேங்க் இருப்பதை வைத்துவிட்டு எல்பிஜி எண்டார்ஸ்மெண்ட் புக்கில் ஆகிவிட்டது என்று நினைக்காதீர்கள் அதனை ஆர்சி புக்கில் சற்று பார்த்துக்கொள்ளவும். தற்போது இருக்கும் சூழ்நிலையில்  LPG  எண்டார்ஸ்மெண்ட் இப்போதைக்கு பண்ணவில்லை. RTO ஆபீஸ் இல் பதிவு செய்வதை நிறுத்திவிட்டனர்.

          எனவே LPG டேங்கர் இருந்தாலும் RC புக் இல் அது பதிவு செய்து இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு வாகனத்தை வாங்குங்கள்.நீங்கள் வாகனம் எடுத்துவிட்டு திரும்பக் கொண்டு வந்தால் எந்த பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்கும் மார்க்கெட்டிலும் திரும்ப எடுக்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
TAMIL24CARS

பயன்படுத்தப்பட்ட ஆம்னி கார்கள் வாங்கும்போது அதனை பயன்படுத்திய நபர்கள் எவ்வாறு பார்ப்பது

             பயன்படுத்தப்பட்ட ஆம்னி கார்களை வாங்கும்போது அதனை எத்தனை நபர்கள் வாகனம் வைத்திருந்தார்கள் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை ஆனால் வாகனத்தின் இன்ஜின் எவ்வாறு உள்ளது என்பதை ஒரு சிறந்த மெக்கானிக் மூலம் பார்ப்பது சிறந்தது. அவ்வாறு வாகனத்தை பார்க்கும் பொழுது இஞ்சின் தெளிவாக இருந்தால் தாராளமாக வாங்கலாம். 
TAMIL24CARS

பயன்படுத்தப்பட்ட ஆம்னி அடி பட்டிருக்கிறதா என்பதை எவ்வாறு பார்ப்பது

              பயன்படுத்தப்பட்ட ஆம்னி கார்களை பொருத்தவரை டிரைவர் கால் வைக்கும் இடம் பிளாட்பார்ம் முன்பகுதி தட்டல்கள் இவை அனைத்தும் அடி பட்டிருக்கிறதா என்பதை காண்பித்துவிடும். இதில் வேலை பார்த்தால் ஈசியாக தெரிந்துவிடும். நான்கு புறமும் இருக்கக்கூடிய கதவுகளில் பில்டிங் ரப்பரை வெளியே எடுத்து அதில் ஒரிஜினாலிட்டி புள்ளிகள் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும். பயன்படுத்தப்பட்ட ஆம்னி இன் முன்பக்க கண்ணாடிகள் சைடு கண்ணாடிகள் இவையெல்லாம் மாற்றி தான் இருப்பர் ஏனென்றால் பழைய வாகனம் என்று கூறும் போது கண்ணாடியில் கண்டிப்பாக கீறல்கள் இருக்க வாய்ப்பு இருக்க தான் செய்யும்.

பயன்படுத்தப்பட்ட ஆம்னி கார் வாங்கலாமா வேண்டாமா

               பயன்படுத்தப்பட்ட ஆம்னி கார்கள் வாங்குகிறீர்கள் என்றால் ரொம்ப பழைய மாடல்கள் தயவு செய்து வாங்க வேண்டாம் ஏனென்றால் அதில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும் முடிந்த அளவு 2010 க்கு மேல் உள்ள ஆம்ணிகளை வாங்கிக் கொள்ளவும். ரொம்ப பழைய மாடல்கள் வாகனம் எடுத்தால் பெட்ரோல் அண்ட் கேஸ் மிக்ஸ் ஆகி விட்டால் அதை பிடிப்பதற்கு சற்று கடினம் அதுமட்டுமில்லாமல் அதில் அடிக்கடி என்ஜினில் கோளாறு வர வாய்ப்புள்ளது.

              பெயிண்ட் அடி பட்டிருக்கிறதா இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் எல்லாமே நாம் முந்தைய பதிவில் பதிவிட்டிருக்கிறேன் எனவே அதனை பார்த்து ஆம்னி வாங்கும் போது அதனையும் கருத்தில் கொள்ளுங்கள்
TAMIL24CARS

              குறைந்த செலவில் கார்கள் வாங்க வேண்டும் என்று எண்ணினாள் சற்று இஞ்சின் தெளிவாக இருக்கிறதா என்பதை மற்றும் பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.வியாபாரம் மற்றும் தொழில் நோக்கத்திற்காக வாங்குபவர்கள் தாராளமாக ஆம்னி கார்களை வாங்கலாம் மேலே குறிப்பிட்ட அனைத்து முறைகளையும் பயன்படுத்தி நீங்கள் பயன்படுத்தப்பட்ட ஆம்னி கார்களை வாங்கிக்கொள்ளலாம் .இந்த பதிவு கண்டிப்பாக உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்.


                                                        VIDEO LINK : CLICK HERE


கருத்துரையிடுக