EMI ல் கார் பைக் வாங்கலாமா | தமிழ் 24 கார்ஸ்

EMI இல் கார் வாங்கலாமா?

கார் வாங்கும் பொழுது முழுத் தொகையை செலுத்திய அல்லது மாதாமாதம் தவணை செலுத்தியும் கார்கள் வாங்குகின்றனர். இன்றைய காலகட்டத்தில் 80 மற்றும் 90 காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் தனக்கு வருமானம் வருகிறதோ இல்லையோ ஆனால் நமக்கு கார் இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். பணத்தைப் பற்றி கவலைப்படாமல் கார் என்பது அத்தியாவசியப் பொருள் என்று அவர்கள் நினைக்கின்றனர். சில பேர் மரியாதை என்பதற்காக இதனையும் சேர்த்து வாங்குகின்றனர்.

கார் வாங்கும் பொழுது இன்சூரன்ஸ் கட்டாயமா

ஒரு கார் வாங்கும் பொழுது காருக்கான தொகையை மட்டும் நாம் செலுத்தப் போவதில்லை அதனுடன் சேர்த்து இன்சூரன்ஸ் தொகை மூன்று வருடங்கள் முதல் சேர்த்து கட்ட வேண்டியிருக்கும். இன்சூரன்ஸ் வைப் பொறுத்தவரை நிறைய பேர் கார் வாங்கும் பொழுது இன்சூரன்ஸ் செலுத்துவதைத் தவிர்த்து மற்ற வருடங்களில் செலுத்துவதில்லை எனவே கார் வாங்கும் பொழுது 3 வருடம் முதல் இன்சூரன்ஸ் செய்யும் சேர்த்து அந்த நிறுவனம் போட்டு தருகிறது. அந்த மூன்று வருடங்கள் வரை நாம் காரை பயன்படுத்துவோம் அல்லது விருப்பமா என்பதே நமக்கு தெரியாது. இந்த சூழ்நிலையில் நாம் காருக்கு அதிக தொகை செலுத்தி வாங்குகிறோம்.

கார் அல்லது பைக் வாங்கும் பொழுது TAX அவசியமா 

நான் இன்சூரன்ஸ் உடன் சேர்த்து காருக்கான டாக்ஸ் செலுத்துவது மிக அவசியம். இது அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றார்போல  டாக்ஸ் என்பது மாறுபடலாம். உதாரணமாகப் பார்த்தால் கர்நாடகாவில் கார் வாங்கி ரிஜிஸ்டர் செய்தால் அதற்கு செலுத்த வேண்டிய டாக்ஸ்தொகை மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருக்கும். எனவே நீங்கள் வாங்கும் மாநிலத்தை பொறுத்து அதனுடைய டாக்ஸ் தொகை நமது வாகனம் வாங்கும் விலையுடன் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

EMI லோன் வசதியில் கார் வாங்கும் பொழுது வட்டி விகிதம் எவ்வளவு

கார்கள் வாங்கும்பொழுது மாதாமாதம் தொகை செலுத்தலாம் என்று நாம் கார் வாங்க நினைக்கலாம். அப்போது நிறைய பேர் செய்யும் தவறு என்னவென்றால் லோன் வசதி என்பது கார்களின் விலையிலிருந்து வட்டி விகிதம் தனியாக கட்ட வேண்டியிருக்கும் என்பதனை கருத்தில் கொள்வதில்லை. கார் அல்லது பைக் இற்கான வட்டி விகிதம் என்பது 9% முதல் 14 சதவீதம் வரை இருக்கும். இவ்ளோ அதிகமான வட்டி விகிதம் கொடுத்து நாம் கார் வாங்க வேண்டுமா அப்படி வாங்குகிற கார் நமக்கு அத்தியாவசியமான தா என்பதனை புரிந்து கார்களை லோன் வசதியில் வாங்கிக் கொள்ளுங்கள்.

தொழில் vs கார் 

14% என்ற வட்டி நாம் ஒரு தொழில் செய்யும் பொழுது நமக்கு வருமானமாக கிடைத்தால் அது மிகப் பெரிய லாபம் அதுவே அத்தியாவசியம் இல்லாத ஆடம்பரம் பொருளான கார்களுக்கு நாம் 14 சதவீதம் செலுத்தி கார் வாங்குவது நமது குடும்ப பொருளாதாரத்தை முன்னேற்றமா என்பதனை யோசித்து கார்களை லோன் வசதியில் வாங்குங்கள்.

ஒரு காரின் மறுமதிப்பீடு எவ்வளவு நாள்
ஒரு கார் இன்று வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் வாங்கிய 24 மணி நேரத்திற்குள் அதனுடைய மதிப்பு 10 % வரை குறைந்துவிடுகிறது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக 8 லட்சத்திற்கு கார் வாங்கி இருந்தால் கார் வாங்கிய மறுநாள் அதனுடைய மதிப்பு என்பது 7 லட்சமாக குறைத்து தான் மதிப்பீடுவர். ஒரு வருடம் கழித்து அந்தக் காரின் உடைய மதிப்பு 30% வரை குறைந்துவிடும். எனவே காரில் முதலீடு செய்யலாமா என்பதனை யோசித்து செயல்படுங்கள்.

கார்களுக்கான பராமரிப்புச் செலவு

கார்கள் வாங்கும் பொழுது நாம் இந்த பராமரிப்பு செலவு எவ்வளவு வரும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக கார்கள் வாங்கும்போது கார் நிறுவனங்கள் இத்தனை இத்தனை கிலோ மீட்டர்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்து தருவார்கள் இந்த செலவுகளை நாம் வந்து மனதில் வைத்துக் கொள்வோம் ஆனால் எதிர்பாராதவிதமாக ஏதாவது பிரச்சனை வந்தால் அதை சரி செய்வதற்கு நமக்கு எவ்வளவு தொகை வரும் என்பதை நாம் மறந்து விடுகிறோம். லோன் வசதியில் கார் வாங்க நினைப்பவர்கள் மாதாமாதம் கார் லோன் செலுத்துவதையும் அதனுடன் சேர்த்து இந்த பராமரிப்பு செலவுக்கான தொகையை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

லோன் வசதியில் கார் வாங்குபவர்கள் காருக்கான எரிபொருளுக்கான செலவை கருத்தில் கொள்ள வேண்டும். நாளுக்கு நாள் விலை ஏறிக் கொண்டே இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் நிலவரங்களை நாம் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். மாதம் மாதம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான 10,000 வரை செலவு செய்கிறீர்கள் என்றால் நமது வருமானத்தையும் நாம் கட்ட வேண்டிய லோன் தொகையையும் பராமரிப்பு தொகையையும் நம் குடும்பம் தேவைகளுக்கான தொகையையும் சற்று நினைவில் கொள்ளுங்கள்.

லோன் வசதிகள் கார் வாங்கும் பொழுது அதனுடன் சேர்த்து வாங்கும் சில விடயங்கள்

லோன் வசதியில் கார் வாங்கும் பொழுது கார்களுக்கான அதிகமான அழகு செய்யும் சில தொகைகள் அதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக அலை வீல்ஸ், ஸ்பீக்கர்ஸ், டச் ஸ்கிரீன் டிவி, லெதர் சீட் இதுபோன்ற பலவகையான பொருள்களையும் நாம் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் இதற்கான தொகையை யும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அதிக தூரம் கார்களில் பயணம் செய்கிறோம் என்றால் டோல்கேட் பணம் செலுத்த வேண்டும். இப்போது இருக்கும் சூழ்நிலைகள் நான்கு வழி சாலை எட்டு வழி சாலை என பல்வேறு சாலைகள் இருக்கின்றன, ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்லும் பொழுது டோல் கேட் இருக்கு நாம் பணம் செலுத்த வேண்டும். இது ஒரு முக்கியமான செலவு ஆகும்.

ஏதாவது பொருட்காட்சி திடல் ஷாப்பிங் செல்லும் தருணங்களில் கண்டிப்பாக நமது காருக்கு பார்க்கிங் செய்ய தொகை செலுத்த வேண்டும். இந்த மாதிரியான சின்னச் சின்ன தொகைகளையும் நாம் கார்கள் வாங்கும் பொழுது நமக்குத் தெரியாமலேயே நிறைய செலவுகள் செய்கிறோம்.

 லோன் வசதியில் கார் வாங்கலாமா வேண்டாமா

லோன் வசதியில் கார் வாங்குவதைவிட பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவது மிக சிறந்தது . ஒரு சின்ன எடுத்துக்காட்டு எட்டு லட்ச ரூபாய் கார் வாங்குகிறீர்கள் என்றால் இஎம்ஐ எல்லாம் சேர்த்து மூன்று வருடங்களுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரும். மற்ற செலவுகள் 50,000 என்று எடுத்துக்கொள்ளலாம் ஆகமொத்தம் 10 லட்ச ரூபாய் வருகிறது. இதே நேரத்தில் நீங்கள் பயன்படுத்தப்பட்ட கார் 2 லட்சம் முதல் 3 லட்சத்துக்கும் வாங்கினாள் மீதம் உங்களிடமிருக்கும் 5 லட்ச ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்தால் அதில் கிடைக்கும் லாபம் மூன்று வருடத்தில் ஏழு லட்ச ரூபாய் ஆக திரும்ப கிடைக்கும்.

EMI லோன் வசதிகள் முலம் கார், பைக் வாங்குவதை தவிர்த்து விடுங்கள் அதற்கு பதில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதன்மூலம் நீங்கள் பணத்தை பன்மடங்கு பெருக பல தொழில்களில் முதலீடு செய்யலாம் கார் என்பது அத்தியாவசியமானது என்று நினைத்தால் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி பயன்படுத்துங்கள். உங்களுக்கு வசதிகள் அதிகமாக இருந்தால் புதிய கார்களை முழு  தொகையை செலுத்தி வாங்கள்







கருத்துரையிடுக