ஆட்டோமேட்டிக் கார் vs மேனுவல் கார் எந்த கார் வாங்கலாம் | தமிழ் 24 கார்ஸ்

ஆட்டோமேட்டிக் கீயர் கார் VS மேனுவல் கீயர் கார்

கார் வாங்க நினைக்கும் நபர்கள் முதலில் பெட்ரோல் கார் வாங்குவது இல்லை டீசல் கார் வாங்குவது என்ற குழப்பத்திற்கு பிறகு வரும் மிகப்பெரிய கேள்வி ஆட்டோமேட்டிக் கியர் கார் வாங்குவதாக இல்லை மேனுவல் கியர் கார் வாங்குவது என்பது தான். இவற்றில் எது சிறந்த கார்,
யார் யார் எந்தெந்த கார் வாங்கலாம்எ என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

  • பயன்படுத்த எளிமை
  •  கீயர்ஸ் 
  • பராமரிப்பு 
  • மைலேஜ் 
  • விலை

பயன்படுத்த எளிமை

கார் ஓட்டுவதற்கு எளிமையாகவும் அதே போல் வீட்டில் இருக்கும் அனைவரும் கார் ஓட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஆட்டோமேட்டிக் கார் வாங்கலாம். மிக முக்கியமாக பெண்கள் அனைவருமே ஆட்டோமேட்டிக் காரினை எளிமையாக இயக்கி விடலாம். நீங்கள் மிகப்பெரிய வாகன ஓட்டுநர் என்றால் உங்களுக்கு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வாகனங்கள் இயக்குவதும் ஆட்டோமேட்டிக் கார் இயக்குவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் எந்த மாற்றமும் இருக்காது.

கீயர்ஸ்

புதியதாக வாகனம் ஓட்ட கற்றுக் கொள்பவர்கள்கு கியர்ஸ் என்பது மிகக் குழப்பமாக இருக்கும். ஆனால் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வாகனங்களில் கிளர்ச்சி இருக்காது உங்கள் வேகத்திற்கு ஏற்ப அதுவே மாறிவிடும். ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் மட்டுமே இருக்கும்.  D என்ற பட்டன் இருக்கும் அதை ஆன் செய்துவிட்டு ஆக்சிலேட்டர் மற்றும் பிரேக் பயன்படுத்தி வாகனத்தை இயக்கலாம்.

மலைப்பகுதியில் வாகனம் ஏறும்பொழுது மேனுவல் கியர் கார்களில் கீயர் மாற்றுவது கொஞ்சம் கடினம். டிராபிக் அதிகமாக உள்ள பகுதிகளில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்துவது மிக எளிமையாக தெரியும்.

கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் அதுவும் கியர் மூலம் இயக்குவது என்றால் ஒரு பயங்கரமான அனுபவத்தை கொடுக்கும் என்று நினைப்பவர்கள் மேனுவல் கியர் கார் எடுப்பது சிறந்தது.

பராமரிப்பு

பராமரிப்பு என்பதைப் பொருத்தவரை மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களை பராமரிப்பதை விட ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்களை பராமரிப்புச் செலவுகள் அதிகம். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்களின் நிறைய பகுதிகள் சேர்ந்திருக்கும் எனவே அதனுடைய பராமரிப்பு செலவும் அதிகமாக தான் இருக்கும். அதில் பழுது என்பதும் அதிகமாக இருக்கும்.

மைலேஜ்

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வந்த ஆரம்ப காலகட்டத்தில் மைலேஜ் என்பது மிகக் குறைவாகத்தான் கொடுத்தது ஏனென்றால் காரில் நிறைய பகுதிகள் சேர்த்து இருப்பதினால் அதனுடைய எடை என்பதும் அதிகமாக இருந்தது எனவே மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களை விட மைலேஜ் குறைவாக கொடுத்தது.

தற்போது நிறைய டெக்னாலஜி மூலம் ஆட்டோமேட்டிக் கியர் கார் உருவாக்கப்படுவதால் மைலேஜ் என்பது மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களை போலவே மைலேஜ் திறன் ஒற்றுமையாகவே இருக்கிறது.

விலை

விலை என்பதைப் பொறுத்தவரை ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்கள் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களை விட 1,00,000 முதல் 1,50,000 வரை அதிகமாக இருக்கும். ஏனென்றால் அதில் கிளர்ச்சி இருக்காது முழுவதுமாக ஆக்சிலேட்டர் மூலமே இயக்கப்படும். மேலும் நம் வேகத்திற்கு ஏற்ப அதுவே கீயர்ஸ் மாற்றிக்கொள்ளும்.

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார் இவற்றில் எது வாங்குவது

வீட்டில் உள்ள அனைவருமே கார் ஓட்ட வேண்டும் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை மைலேஜ் சராசரியாக இருந்தால் போதும் ஓட்டுவதற்கு மிக எளிமையாக இருக்க வேண்டும் இப்போது தான் கார் ஓட்ட கற்றுக் கொள்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ஏற்ற சிறந்த கார் இந்த ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்

ஹைவே ரோட்டில் பயங்கரமான டிரைவிங் அனுபவத்தை அனுபவிக்க வேண்டும் கியர் மாற்றுவது எனக்கு பிடிக்கும், மைலேஜ் அதிகமாக கிடைக்கும், என்னுடைய பட்ஜெட் குறைவாக இருக்கிறது என நினைக்கும் அனைவரும் இந்த மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களை வாங்கலாம்.

இந்தப் பதிவின் மூலம் உங்களுக்கு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் இவற்றில் எந்த கார்களை தேர்ந்தெடுப்பது என்பதை பற்றி ஒரு புரிதல் கிடைத்திருக்கும் இதுபோன்ற மேலும் கார்கள் சம்பந்தமான பயனுள்ள தகவல்களுக்கு நமது வெப்சைட் பகுதியினை தொடர்ந்து பாலோ செய்யுங்கள்.


கருத்துரையிடுக