Bs 4 vs Bs 6 என்றால் என்ன ? தமிழ் 24 கார்ஸ்

Bs4 vs Bs6 அப்படி என்றால் என்ன

BS என்றால் என்ன

         BS என்பது Bharat stage என்பதுதான் இதன் முழுமையான விளக்கம். நம் இந்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் 2000 வருடம் புதிய கொள்கை ஒன்றை கொண்டு வந்தது அதுவே பாரத் ஸ்டேஜ் என்பதாகும். வாகனத்தில் இருந்து வரும் புகையின் மாசுவை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது இந்த பாரத் ஸ்டேஜ் என்ற கொள்கை கொண்டுவரப்பட்டது.

Bs எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது

         BS கொள்கை 2000 ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.பின்னர்2005 முதல் 2010 BS2 BS3 கொண்டுவரப்பட்டது. அதே வருடம் 2010இல் BS4 இடையில் ஒருசில மாநிலங்களுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் 2017 BS4 இந்தியா முழுவதும் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஏப்ரல் 1 2020 bs6 கொண்டுவரப்பட்டுள்ளது. 

Bs5 ஏன் வரவில்லை 

         வளர்ந்த ஐரோப்பிய ஆசிய நாடுகளில் BS6 ரக வாகனங்கள் இயக்கப்பட்டன ஆனால் நம் இந்தியாவில் BS4 ரக வாகனங்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன எனவேதான் BS 5 அறிமுகம் செய்யாமல் நேராக BS6 அறிமுகம் செய்து விட்டனர்.

BS 6  BS 4 என்ன வித்தியாசம்

           பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களில் சில மாற்றங்கள் செய்தால் மட்டுமே BS 6 ரக பெட்ரோல் மற்றும் டீசல் தயார் செய்ய முடியும். அதிலிருக்கும் மூலப்பொருட்கள் குறைவாக இருப்பது BS4 ரக பெட்ரோல் டீசல் ஆகும். Nitrous oxide பெட்ரோல் மற்றும் டீசலில் இருக்கும் அளவைப் பொறுத்து வாகனத்தின் புகை நிர்ணயிக்கப்படுகிறது. இதை குறைக்கும் வகையில் தான் BS6 ரக இன்ஜின் தயாரிக்கப்பட்டு வருகிறது.

BS 6 மற்றும் BS4 எந்த வாகனம் சிறந்தது

             BS4 ரக பெட்ரோல் வாகனங்களை பொருத்தவரை BS6 ரக பெட்ரோல் வாகனங்களுக்கும் வித்தியாசம் என்பது ரொம்ப இருக்காது ஆனால் bs4 ரக டீசல் வாகனங்களை பொருத்தவரை பிஎஸ்6 ரக டீசல் வாகனங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். வரும் காலங்களில் BS6 ரக பெட்ரோல் அல்லது டீசல் விற்பனைக்கு எரிவாயு விற்பனை நிலையங்களில் கிடைக்கும்.

           பிஎஸ் ஊரக பெட்ரோல் வாகனங்களில் BS6 ரக பெட்ரோல் ஊற்றினால் பெட்ரோல் ரக இன்ஜின் மிகப்பெரிய பாதிப்பு அடைவதில்லை, ஆனால் அதேசமயத்தில் BS4 ரக டீசல் வாகனத்தில் BS6 டீசல் ஊற்றினாள் அதனுடைய இன்ஜின் முழுவதுமாக பாதிப்பு அடைய அதிக வாய்ப்பிருக்கிறது.

           எனவே BS6 டீசல் வாகனம் வைத்திருப்போர் கவனமாக இருக்க வேண்டும் இனி BS6 ரக பயன்படுத்தப்பட்ட கார் வாங்குகிறீர்கள் என்றால் தயவு செய்து கொஞ்சம் இந்த BS6 டீசல் பயன்படுத்துவதனால் வரும் பிரச்சனைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.

BS4 VS BS6 மைலேஜ் அதிகமாக எது கொடுக்கும்

             BS4 ரக  பெட்ரோல் மற்றும் டீசல் ரக வாகனங்கள் மைலேஜ் என்பது BS6 பெட்ரோல் மற்றும் டீசல் ரக வாகனங்களை விட குறைவாகவே மைலேஜ் என்பது கொடுக்கும். ஏனென்றால் BS6 இன்ஜின் தயாரிக்கப்படும் பொழுது BS6 பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவே அதன் திறன் அதிகம் மைலேஜ் என்பது மிகக் குறைவு. எவ்வளவு மைலேஜ் கம்மியாக கிடைக்கும் என்றால் BS4 ரக எரிவாயுவிலிருந்து bs6 எரிவாயு பயன்படுத்துவதனால் ஒரு கிலோ மீட்டர் வரை மைலேஜ் குறைய வாய்ப்பிருக்கிறது.

BS6 ரக பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்படி இருக்கும்

           விலையைப் பொறுத்தவரை பிஎஸ் ரக பெட்ரோல் மற்றும் டீசல் BS4 நிறைய மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படுவதால் இதனுடைய விலை என்பது சற்று அதிகமாக தான் இருக்கும் ஏப்ரல் 2020மாதத்திற்கு பிறகு,

பிஎஸ் 6 ரக வாகனங்களின் விலை எப்படி இருக்கும்

            விலையைப் பொறுத்தவரை பிஎஸ் 6 ரக வாகனங்களில் இன்ஜின் என்பது பெட்ரோல் இன்ஜின் இற்கு மாற்றம் இருக்காது .ஆனால் டீசல் இன்ஜின் இருக்கு அதிகப்படியான டெக்னாலஜி மூலம் bs6 டீசல் எரிபொருள் மூலம்வாகனத்தை இயக்குகின்றனர். 

           எனவே விலை என்பது BS6 பெட்ரோல் கார்களை விட bs6 டீசல் கார் உன்னுடைய விலை சற்று அதிகமாக இருக்கும்.BS4 ரக கார்களை விட BS6 ரக கார்கள் விலை அதிகமாக இருக்கும்.

           இந்தப் பதிவு மூலம் உங்களுக்கு BS4 மற்றும் BS6 ரக வாகனங்களின் இருக்கும் வித்தியாசம் தெரிந்திருக்கும் இதுபோன்ற வித்தியாசமான கார் மற்றும் பைக் ஆட்டோமொபைல் சம்பந்தமான உங்களுடைய சந்தேகங்களுக்கு எங்களுடைய வெப்சைட் பக்கத்தினை பாலோ செய்யுங்கள்

கருத்துரையிடுக