பெட்ரோல் கார் அல்லது டிசல் கார் எது வாங்கலாம் | தமிழ் 24 கார்ஸ்

பெட்ரோல் கார்  அல்லது டீசல் கார் எதை வாங்குவது

       கார்வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததுமே நமக்கு முதலில் எந்த கார் வாங்குவது என்று தோணும் என்றால் பெட்ரோல் கார் வாங்குவதா அல்லது டீசல் காரை தேர்ந்தெடுப்பது என்பது தோன்றும் இப்பொழுது நமது மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை மற்றும் நாம் வைத்து பார்ப்போம் எலக்ட்ரிக் அவர்களின் நடைமுறை இன்னும் பதினைந்து வருடங்களுக்குள் தான் நல்ல ஒரு நாம் வாங்கும் விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது அதே மாதிரி அதிகமான தயாரிப்புகளும் தயாரிக்கவில்லை எனவே நாம் பெட்ரோல் கார் வாங்குவது விலை டீசல் கார் வாங்குவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏல டீசல் கார் உகந்தது

 டிசல் காரை பொருத்த அளவுக்கு தினம்தோறும் ஐம்பதிலிருந்து அதிகமான கிலோ மீட்டர் தாண்டி வரை செல்லும் பயணம் செய்யும் நபர்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது டீசல் காரை தேர்ந்தெடுக்கலாம் .டீசல் மைலேஜ் அதிகம் கொடுப்பதனால் இந்த காரை அதிக தூரம் பயணம் செய்ய பயன்படுத்தலாம்.

யாருக்கு பெட்ரோல் கார் உகந்தது

பெட்ரோல் காரை பொருத்த அளவுக்கு வீட்டு தேவைகளுக்காக மட்டும் கார்களை வாரமொரு நேரம் பயணம் செய்யும் நபர்களுக்கு கிலோமீட்டர் என்பது பெரிய வித்தியாசம் இருக்காது இவர்களுக்கு பெட்ரோல் கார் வந்தது மைலேஜ் என்பதை இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டும். இந்த வகை இன்ஜின் களில் அதிக செலவு வர வாய்ப்பு இல்லை.

பராமரிப்பு செலவு டீசல் காருக்கு அதிகமாக பெட்ரோல் காருக்கு அதிகமா

பராமரிப்பு என்பதைப் பொருத்தவரை பெற்றோர்களுக்கு மிகக் குறைவு டீசல் கார்களுக்கு இரண்டு வருடம் மூன்று வருடம் ஆகிய பின்பு பராமரிப்புச் செலவு கொஞ்சம் அதிகமாக வரும் ஆனால் பெட்ரோல் காரா இருப்பின் 15 வருடங்களுக்கு மிகப்பெரிய பராமரிப்புச் செலவு எதுவும் வருவதில்லை .எனவே நிறைய மக்கள் பெட்ரோல் காரை தேர்ந்தெடுக்கின்றனர்.
    நாம் என்ன தேவைகளுக்காக கார்கள் வாங்குகிறோம் என்பதை பொருத்து எவ்வளவு தூரம் பயணம் செய்ய போகிறோம் எவ்வளவு நாள் இந்த காரை நாம் வைத்திருக்கப் போகிறோம் என்பதைப் பொறுத்து நீங்கள் தாராளமாக பெட்ரோல் அல்லது டீசல் கார் வாங்குவது என்பதை முடிவு செய்யுங்கள் நான் வாரத்திலேயே ஒரு நாள் தான் கார் எடுப்பேன் என்றால் நீங்கள் டீசல் கார் வாங்க வேண்டிய தேவையே இல்லை பெட்ரோல் காரை தெரிந்தெடுக்கவும்.

பெட்ரோல் காரின் முக்கியத்துவம்

டீசல் காரை பொறுத்தவரை பெட்ரோல் கார் விலை சற்று கம்மியாக இருக்கும்.பெட்ரோல் கார் இனுடைய டார்க் கம்மியாக இருக்கும் ஆனால் அதனுடைய பவர் என்பது மிக அதிகமாக இருக்கும். கிலோமீட்டர் என்பதை வேகமாக அடைய முடியும் அதிவேக கார் டிரைவிங் அனுபவம் வேண்டுமென்றால் பெட்ரோல் காரை தேர்ந்தெடுக்கலாம். மேலும் பெட்ரோல் கார் நான் நிறுத்தி வைத்திருந்தாலும் இஞ்சின் ஆன் செய்த நிலையில் எந்தவிதமான இன்ஜின் சப்தங்களும் வருவதில்லை. டீசல் கார்களை விட பெட்ரோல் கார்களின் இன்ஜினில் சப்தம் என்பது கம்மியாகத்தான் இருக்கும். இன்ஜின் வேக திறன் என்பது கொஞ்சம் அதிகமாக இருக்கும். பெட்ரோல் கார் மைலேஜ் என்பது கொஞ்சம் கம்மியாக கொடுக்கும். பயன்படுத்திய பெண் பெட்ரோல் காரை விற்பது என்பது இப்போது இருக்கும் சூழ்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஓரளவு சமமாகவே இருக்கிறது எனவே நிறைய பேருக்கு பெட்ரோல் கார் இன்றைய தேவையும் இருக்கிறது.

பெட்ரோல் காரை ட்ராவல்ஸ் பயன்படுத்தலாமா

ட்ராவல்ஸ் என்று பொருத்தவரை கிலோமீட்டர் அதிகமாக செல்லக்கூடிய வாகனத்தை விரும்புவர் அதேபோல் பெட்ரோல் காரில் குறைந்தது நாளிலிருந்து ஐந்து நபர்கள் வரை இருந்தால் வண்டியின் வேகம் முறையாக இருக்கும் அதற்கு மேல் ஏறினால் வண்டியின் ஒழுங்குமுறை அவ்வளவு சரியாக இருக்காது. எனவே நீங்கள் ட்ராவல்ஸ் க்கு பயன்படுத்த போகிறீர்கள் என்றால் தாராளமாக டீசல் காரை தேர்ந்தெடுப்பது நல்லது.

டீசல் காரை யார் வாங்கலாம்

டீசல் காரை பொருத்தவரை விலை என்பது அதிகமாக இருந்தாலும் அதிகமான கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் டீசல் காரை தேர்ந்தெடுப்பதே நல்லது ஏனென்றால் அதனுடைய டார்க் என்பது அதிகமாக பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களில் அதிகமான நபர்கள்பெட்ரோல் கார்களை விட டீசல் கார்களில் அதிகமான நபர்கள் அமர்ந்து பயணம் செய்யலாம். இந்த வாகனத்தின் உடைய இழுவை திறனும் அதிகமாக இருக்கும்.
டீசல் கார்களை பொருத்தவரை வண்டியினுள் வைப்ரேஷன் மற்றும் சப்தங்கள் அதிகமாகவே தான் இருக்கும்.டீசல் கார்களை பொருத்தவரை ஏதாவது சிறிய பராமரிப்பு செலவு வந்தாலும் அதன் விலை அதிகமாக இருக்கும். என்ன சர்வீசுக்கு கொண்டு சென்றாலும் டீசல் காருக்கு சற்று செலவு அதிகமாக வரும்.ஐந்து வருடம் முதல் ஆறு வருடம் வரை நீங்கள் பயன்படுத்திய பின் டீசல் காரை நல்ல விலைக்கு விற்று விடலாம் அதை வாங்க அதிகமான நபர்கள் வருவர்.

தினந்தோறும் ஐம்பதிலிருந்து நூறு கிலோமீட்டர் அதாவது மாதத்திற்கு ஆயிரம் முதல் ஆயிரத்து 500 கிலோமீட்டர் வரை செல்வீர்கள் என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய கார் டீசல் கார் தான் வாரம் ஒரு முறை மட்டும் வாகனம் எடுத்தால் பெட்ரோல் காரை தேர்ந்தெடுப்பது நல்லது.
வருடம் என்று பார்த்தால் நான்கு வருடம் ஐந்து வருடம் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் டீசல் கார் எடுங்கள் மூன்று வருடம் நான்கு வருடம் தான் பயன்படுத்தப் போகிறேன் என்றால் தாராளமாக பெட்ரோல் காரை தேர்ந்தெடுங்கள்.

பெட்ரோல் கார் vs டீசல் கார்

உங்களது தேவை எதைப் பொறுத்து இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு பெட்ரோல் அல்லது டீசல் காரை தேர்ந்தெடுங்கள் என்னுடைய கருத்து என்று பார்த்தால் நீங்கள் செல்லும் தூரம் குறைவாக இருந்தால் தினசரி பயன்பாடு இருந்தாலும் சரி பெட்ரோல் காரை தேர்ந்தெடுங்கள் அதேவேளையில் டிராவல்ஸ் டாக்ஸி இந்த மாதிரி பயன்பாட்டிற்காக வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது டீசல் காரை தான் ஏனென்றால் இதனுடைய மைலேஜ் திறன் அதிகம் இழுவை திறன் அதிகம் இன்ஜின் பராமரிப்பு அதிகம். வீட்டு தேவைகள் என்று வரும்பொழுது வாரம் ஒரு முறைதான் எடுப்போம் என்றால் நீங்கள் பெட்ரோல் காரை தேர்ந்தெடுங்கள்.
இது என்னுடைய கருத்து உங்கள் தேவைகளை அறிந்து பெட்ரோல் அல்லது டீசல் காரை தேர்ந்தெடுங்கள் விலை என்று பார்த்தால் பெட்ரோல் கார்களை விட டீசல் கார்கள் சற்று அதிகமாக இருக்க இதுவே காரணம் நம் தேவை எது என்பதை உணர்ந்து பெட்ரோல் அல்லது டீசல் கார்களை வாங்கி மகிழுங்கள் மேலும் கார்கள் சம்பந்தப்பட்ட ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கமெண்டில் தெரிவியுங்கள் இது போன்ற நிறைய பதிவுகளை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்


1 கருத்துகள்

கருத்துரையிடுக