மெக்கானிக் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட கார்களை எவ்வாறு பார்த்து வாங்குவது தமிழ் 24 கார்ஸ்

மெக்கானிக் இல்லாமல் பழைய கார்களை எப்படி பார்த்து வாங்குவது

             

கார் வாங்கணும் அப்படிங்கிற கனவு எல்லாத்துக்குமே வந்து இருக்கும் அப்படி இருக்கிற பட்சத்தில் புது கார் வாங்குவதா இல்லை பழைய கார் வாங்குவதா அப்படின்னு பெரிய கலந்துரையாடல் போயிட்டு இருக்கும்.சில பேர்கிட்ட பட்ஜெட் அப்படிங்கிறது கம்மியா இருக்கு அதனால பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க நினைக்கின்றனர்.

          அவ்வாறு பயன்படுத்தப்பட்ட கார் வாங்க நினைப்பவர்கள் ஒரு நல்ல பயன்படுத்தப்பட்ட கார்களை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது தெரியாமல் மிக வருந்துகின்றனர் ஒரு சிறந்த மெக்கானிக் கிடைத்தால் நல்ல பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குகின்றனர் அவ்வாறு சிறந்த மெக்கானிக் கிடைப்பது மிகவும் கடினம்.

           உங்களுக்கு அறிமுகம் உள்ள நல்ல மெக்கானிக்கை களை வைத்து கார் வாங்குவது சிறந்தது.

          இந்த பதிவில் உங்களுக்கு மெக்கானிக் இல்லாமலேயே நீங்கள் எப்படி பயன்படுத்தப்பட்ட கார்கள் சின்ன சின்ன வழிமுறைகளை பயன்படுத்தி கண்டறியலாம் அதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பயன்படுத்தப்பட்ட கார்களில் முதலில் பார்க்கவேண்டிய முக்கியமான விஷயம்

          பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும்போது முதன்முதலில் இன்ஜின் எவ்வாறு உள்ளது என்பதை தான் முதலில் பார்க்க வேண்டும். ஏனென்றால் அதிகமான விலை உயர்ந்த ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கக் கூடிய இடம் இன்ஜின் தான்.

இன்ஜின் எவ்வாறு பார்த்து வாங்குவது

 • இன்ஜின் முதலில் பார்ப்பதற்கு வண்டியை முதலில் ஸ்டார்ட் செய்யவும்
 • பத்து நிமிடத்தில் இருந்து 20 நிமிடங்கள் வரை கார் ரன்னிங்கில் இருக்கவேண்டும்.
 • இப்போது இன்ஜின் ஆயிலை பார்க்கவேண்டும் இன்ஜின் ஆயில் இன் நிறம் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
 • நிறம் என்பது சிவப்பு பழுப்பு அல்லது மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருந்தால் இன்ஜின் ஆயில் தரமாக உள்ளது.
 • இன்ஜினின் ஆயிலின் நிறம் முழு கருப்பு நிறமாக இருந்தால் அந்த வாகனத்தை சரியாக பராமரிக்கவில்லை. இன்ஜினில் பிரச்சனை இருக்கிறது.
 • இன்னொரு எளிமையான வழியில் இன்ஜின் ஆயில் தரம் மற்றும் இன்ஜினை நாம் அறியலாம் என்னவென்றால் இன்ஜின் ஆயில் கேப் மூடி அதனை திறந்து அதனை மூடியின் மேல் பக்கத்தில் வெள்ளை நிறம் கொண்டு கிரிஸ் போல இருந்தாள் அந்த இன்ஜினில் வேலை இருக்கிறது என்று அர்த்தம்.
 • அடுத்து இன்ஜினில் நீங்கள் பார்க்கவேண்டிய முக்கியமான விஷயம் கேபிள் ஒயர்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா சரியான முறையில் மின் இணைப்பு வேலை செய்கிறதா என்பதனையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.இதை ஏன் கவனிக்க வேண்டும் என்றால் அதிக அளவில் பணம் செலவழிக்க வேண்டிய இடம் இதுதான்.
 • கார் அதிகப்படியான நேரம் ஒரே இடத்தில் நின்றால் அதனடியில் ஏதேனும் லீக்கேஜ் இருந்தால் அது எதற்காக லீக் ஆகிறது என்பதை ஆராய வேண்டும். இன்ஜின் ஆயில் மட்டும் ரேடியேட்டர் ஆயில் லீக்கேஜ் களைக் கண்டறிய இந்த முறையை பயன்படுத்தலாம்.

கார்களில் இருந்து வரக்கூடிய புகையை பார்க்கவேண்டும்

 • நீல நிறத்தில் வந்தால் அந்த கார் எரிபொருளை அதிகம் எடுத்துக் கொள்கிறது என்று அர்த்தம்.
 • அதிகப்படியான கருப்பு நிறத்தில் புகை வந்தால் அதிகமான எரிபொருள்களை வெளியேறுகிறது என்று அர்த்தம், இந்த நிலையில் அந்த கார் மைலேஜ் என்பது மிகக்குறைவாக கொடுக்கும்.
 • வெள்ளை நிறத்தில் புகை வந்தால் கம்ப்ரஸர் கூலன்ட் ஆயில் லீக்கேஜ் இருக்கிறது என்பதை குறிக்கும்.
 • அதேசமயத்தில் புகை குழாயில்வெள்ளை நிற கிரீஸ் போல இருந்தால் அதுவும் இன்ஜினில் வேலை இருக்கிறது .

கார் கதவுகளை எவ்வாறு பார்த்து வாங்குவது

 • கார்களின் கதவுகளுக்கு இடையில் ஏதேனும் நெளிவு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
 • சின்ன சின்ன இடைவெளி இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.
 • வெல்டிங் ஒர்க் ஏதாவது பார்த்து இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
 • இதனால் பெரிய பாதிப்பு வரப்போவதில்லை இருந்தாலும் இரண்டாவது நம் மாற்றுவது போல் ஏற்கக்கூடாது.
 • விலை குறைத்து வாங்குவதற்கு இதனையும் நாம் எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

Re Modified கார் வாங்கலாமா

 • இந்த வகை கார்களில் கலர் என்பது மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் உங்களது ஆர்சி புக்கிலும் வாகனத்தின் கலரும் சரியாக பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும்.
 • ஏதாவது விபத்தை சந்தித்தால் கார் கலர் மாற்றியமைக்கப்பட்ட இருப்பதனால், திரும்ப கார் அதே கலரில்  மாற்றுவது கடினம்.
 • அதில் வரும் செலவுகள் மிக அதிகமாக இருக்கும்.

டயர் தரம் எவ்வாறு பார்த்து வாங்குவது

          டயர் தரம் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ளவும். டயர்களில் இருக்கும் கிரிப் இடைவெளியில் அந்த நாணயத்தை திணிக்க வேண்டும். குறைவாக உள்ளே சென்றாள் டயர் சுமாராக உள்ளது அதே சமயத்தில் நாணயம் முழுவதும் உள்ளே சென்றாள் டயர் புதிய டயர் என்று அர்த்தம்.

          அந்த நாணயம் உள்ளேயே செல்லவில்லை என்றால் அந்த டயர் ஆயுட் காலம் முடிந்து விட்டது என்று அர்த்தம். டயர் உடனே நீங்கள் மாற்ற வேண்டியிருக்கும்.

          இன்னொரு முறையிலும் நீங்கள் டயர் தரம் அறியலாம். கார் டயரின் இடைவெளி 3mm இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் அது புது டயர்.
இதைத் தவிர்த்து டயர் இடைவெளி 2mm  or  1.5mm  இருந்தால் கார் குறிப்பிட்ட கிலோமீட்டர் வரை ஓட்டலாம்.

         1mm  கீழே இருந்தால் அந்தக் கார் டயர் உடனே நீங்கள் மாற்ற வேண்டியிருக்கும். இதற்கும் நீங்கள் அதிகமாக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

சீட் எவ்வாறு பார்த்து வாங்குவது

            கார் வாங்கும் பொழுது காரின் உடைய உள்பகுதியில் சீட் எவ்வாறு இருக்கிறது சீட்டுகளில் கிழிசல்கள் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் ஏனென்றால் அவ்வாறு இருந்தால் அதனை நீங்கள் மாற்றியமைப்பதற்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.
           அந்தக் காரின் உடைய விலையை குறைப்பதற்கு இதனையும் ஒரு காரணமாக கூறி விலையை குறைக்கலாம்

காரி ஏசி வேலை செய்கிறதா என்பதை எவ்வாறு பார்ப்பது

           ஏசியை ஆன் செய்துவிட்டு முன் இருக்கையில் உட்காராமல் பின் இருக்கையில் உட்கார்ந்து எவ்வளவு நிமிடத்தில் ஏசி ஒர்க் ஆகிறது என்பதை பார்க்க வேண்டும்.
          மொத்தமாக எவ்வளவு நிமிடத்தில் கார் முழுவதும் ஏசி நிரப்ப நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

ஆட்டோமேட்டிக் கார் எவ்வாறு பார்ப்பது

         எலக்ட்ரானிக் ஆக்சஸரீஸ் அனைத்தும் வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டும் உதாரணமாக பவர் விண்டோ இருந்தால் அனைத்து கதவுகளும் பவர் விண்டோ வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டும்.

           கீயர்ஸ் அனைத்தும் இருக்கிறதா என்று பார்க்கவும்.

           நிறைய இடங்களில் டெஸ்ட் டிரைவ் தருவதில்லை நீங்கள் முதலில் டெஸ்ட் எடுத்துப் பார்த்தால்தான் காரில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் கார் வாங்குகிறீர்கள் என்றால் முதலில் டெஸ்ட் டிரைவ் தரும் இடங்களில் கார்கள் வாங்குங்கள்.

           நல்ல தரமான சாலையில் செல்லும் பொழுது காரின் சஸ்பென்ஷன் எவ்வாறு இருக்கிறது கரடுமுரடான சாலையில் செல்லும் பொழுது அதனுடைய சஸ்பென்ஸ் எவ்வாறு இருக்கிறது என்பதை நான் பார்த்துக் கொள்ளலாம்.

ஆர்சி புக் எவ்வாறு பார்ப்பது

           கார்களின் நிறம் ஆர்சி புக் இல் பதிவு செய்தது போல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் .
           கார் ரெஜிஸ்டர் நம்பர் ஒரே போல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
இன்ஜின் பகுதியில் சேஸ் நம்பர் இருக்கும் அந்த நம்பர் ஒன் ஆசி புக்கில் இருக்கும் நம்பரும் சரியாக பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும்.

          இந்த பதிவில் மெக்கானிக்கல் இல்லாமல் கூட நீங்கள் எவ்வாறு கார் பார்த்து வாங்குவது என்பதை பற்றியும் விரிவாக கூறியுள்ள இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்புகிறோம்.இது போன்ற கார்கள் சம்பந்தமான ஏதேனும் உங்கள் சந்தேகம் இருந்தால் கமெண்ட் பதிவில் கமெண்ட் செய்யவும் அதற்கு அடுத்த பதிவாக வெளியிடுகிறேன்.
கருத்துரையிடுக