How to Check Used Car Mahindra Scorpio and Maintenance in Tamil

பயன்படுத்தப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கார் எப்படி பார்த்து வாங்குவது மற்றும் எவ்வாறு பராமரிப்பது


கார்களின் தனி  ராஜா என்று அழைக்கப்படுவது மஹிந்திரா ஸ்கார்பியோ தான் ஏனென்றால் அதனுடைய வடிவமைப்பு அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். மகேந்திரா ஸ்கார்பியோ இன் தோற்றம் இன்று வரை வேறு எந்த கார்களுக்கும் வரவில்லை.மஹிந்திரா ஸ்கார்பியோ எப்படி பார்த்து வாங்குவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.பெரிய பட்ஜெட் கார்களின் ராஜா என்றே சொல்லலாம். இந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்களை இதை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது.

மஹிந்திரா கார்களில் இன்ஜின் வகைகள்

  • M Hawk
  • CRDI
  • SLX
  • Mduty I

இந்த மாதிரி நான்கு வகையான இன்ஜின் வகைகளில் மகேந்திரா ஸ்கார்பியோ கார்கள் கிடைக்கின்றன. இதில் சிறந்த இன்ஜின் என்று பார்த்தால் அது M Hawk இன்ஜின் தான்.

பயன்படுத்தப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களில் எந்த இன்ஜின் கொண்ட கார் மறுமதிப்பீடு அதிகம்

பயன்படுத்தப்பட்ட மகேந்திரா ஸ்கார்பியோ கார்களைப் பொறுத்தவரை அதில் பயன்படுத்தப்படும் .இன்ஜினை பொறுத்து அதன் மறு மதிப்பீடு என்பது மாறுகிறது அதில் குறிப்பாக MHawk இன்ஜின்தான் மறுமதிப்பீடு என்பது அதிகமாக இருக்கும்.
இரண்டாவது இன்ஜின் என்று பார்த்தால் சிஆர்டிஐ இன்ஜின் இரண்டாவது இடத்தையும் பிடிக்கிறது.

Mduty I இந்த வகை இன்ஜினை பொருத்தவரை நடப்பு ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ களில் இந்த Mdutyi இன்ஜின் வருகிறது இதனுடைய மறுமதிப்பீடு என்பது மிகக் குறைவு.

மஹிந்திரா பயன்படுத்தப்பட்ட கார்களைப் பொறுத்தவரை முதலில் ஆர்சி புக்கில் இருக்கும் கேஸ் நம்பரையும் வண்டியில் இருக்கும் கேஸ் நம்பரையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் ஏனென்றால் இதில் நிறைய ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கின்றனர். செஸ் என்பது முன் டயர் பகுதிகளில் இடைப்பட்ட இடத்தில் இரும்பு பட்டைகள் இருக்கும் அதில் இந்த சேஸ் நம்பர் பொறிக்கப்பட்டிருக்கும். இதனை மறக்காமல் பார்வையிட்டுக் கொள்ளுங்கள்.

மஹிந்திரா பயன்படுத்தப்பட்ட கார் எடுக்கும் பொழுது முதலில் இன்ஜினில் கவனிக்க வேண்டியவை

இன்ஜின்களை பொறுத்தவரை முதலில் பிரேக் ஆயில் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். ஆயில் லெவல் கம்மியாக இருந்தால் அதனை முதலில் நிரப்பிக் கொள்ளவும். அந்த ஆயில் கம்மியாக இருந்தால் பிரேக் பிடிப்பது சற்று கடினம்.

இரண்டாவது பவர் ஸ்டீயரிங் ஆயில் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும் அதுவும் இல்லை என்றால் முழுமைப்படுத்தி கொள்ள வேண்டும் இல்லையென்றால் ஸ்டேரிங் திருப்பும் பொழுது சில சப்தங்கள் கேட்கும். எனவே பவர் ஸ்டீயரிங் ஆயிலையும் பார்த்துக்கொள்ளவும்

மூன்றாவது இன்ஜின் ஆயில் லெவல் எவ்வளவு இருக்கிறது என்பதை ஆயில் கேஜ் இந்த மஹிந்திரா பயன்படுத்தப்பட்ட கார்களில் இடதுபுறம் இருக்கும். அதனை வெளியே எடுத்து ஆயில் எவ்வளவு உள்ளது என்பதை பார்க்க வேண்டும் ஆயில் கம்மியாக இருந்தால் அதனை நிரப்பிக்கொள்ள வேண்டும்.மற்ற வாகனங்களுக்கு ஆயில் கேஜ் வெளியே எடுத்து எப்படி பார்ப்போம் அதேபோலவே பார்க்க வேண்டும் அதில் இரண்டு புள்ளிகள் இருக்கும் அந்த இரண்டு புள்ளிகளில் முதல் புள்ளிகளுக்கு கீழே இருந்தால் ஆயில் நிரப்பிவிட்டு வண்டி எடுப்பது சிறந்தது இல்லை எனில் இன்ஜின் வேலை வர அதிக வாய்ப்பு உள்ளது. அதுபோக அவ்வாறு  ஆயில் மிக கம்மியாக இருந்தால் இன்ஜின் வேலை உள்ளது என்று அர்த்தம். இன்ஜின் அதிகமாக ஆயில் சாப்பிடுகிறது என்று அர்த்தம்.

நான்காவது ரேடியேட்டரில் கூலன்ட் ஆயில் அல்லது தண்ணீர் சரியாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் அவ்வாறு அதுவும் குறையாக இருந்தால் அதனையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஒரு பயன்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ வாங்குகிறீர்கள் என்றால் அதனை முறையாக ஐந்து கிலோமீட்டர் வரை நீங்கள் சென்று வந்தால்தான் இன்ஜின் பகுதியில் இருக்கக்கூடிய பேன்கள் எல்லாமே வந்து இயங்கும். குறைவான தூரத்தில் ஓடிவந்தாள் இன்ஜினின் தன்மையை கண்டறிவது சற்று கடினம். முடிந்த அளவு சற்று அதிகமான தூரம் ஓடி சென்று பார்ப்பது நல்லது. மேலும் இன்ஜின் சூடு ஆகிறதா என்பதையும் பார்க்க வேண்டும் அதிகமான வெப்பம் ஏற்பட்டால் பேன் இயங்கவில்லை என்று கருத்தில் கொள்ளலாம்.

நீங்கள் அதிக தூரம் வாகனத்தை எடுத்து விட்டு திரும்பி வந்தால் வண்டியை ஆப் செய்யாமல் எல்கேஜி புடுங்கி பார்க்கவேண்டும் இப்போது ஆயில் வெளியே தள்ளினாள் இன்ஜினின் தன்மை 70% இருக்கும் மாற்றாக ஆயில் மற்றும் புகை வெளியே வந்தால் அந்த பயன்படுத்தப்பட்ட மகேந்திரா ஸ்கார்பியோ காரின் இன்ஜின் என்பது 40% தான் இருக்கும்.

ஸ்கார்பியோ பயன்படுத்தப்பட்ட கார்களில் டயர் பார்ப்பது மிகவும் சிறந்தது

பயன்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ கார்களில் நீங்கள் டயர் பகுதியினை அதிகமாக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்களின் டயர்களின் விலை அதிகமாக இருக்கும். எனவே டயர்களின் தன்மையை அறிவது மிகவும் சிறந்தது.

மஹிந்திரா பயன்படுத்தப்பட்ட கார்களில் அடிப்படை இருக்கிறதா என்பதை எவ்வாறு பார்ப்பது

மஹிந்திரா பயன்படுத்தப்பட்ட கார்களை பொருத்தவரை பில்டிங் என்று சொல்லக்கூடிய 4 கதவுகள் இருக்கும். அந்தக் கதவுகளில் பில்டிங் ரப்பரை வெளியே எடுத்துப் பார்த்தால் மற்றவர்களுக்கு பார்ப்பது போலவே அந்த கம்பெனி புள்ளிகள் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.அரிப்பு அல்லது வாகனம் விபத்துக்குள்ளாகி இருந்தால் இந்த இடத்தில் வேலை பார்த்து இருப்பார்கள் அவ்வாறு பார்த்து இருந்தால் இதனை வைத்து நாம் முறையாக கண்டுபிடித்துவிடலாம். அந்தத் பிடிங் எடுத்ததற்கு அப்புறம் வாகனத்தின் உள்புறம் இருக்கும் பிளாஸ்டிக் கவர் அதனையும் நம்மால் ரிமூவ் செய்ய முடியும்.உட்புறமாக இருந்தும் வேலை பார்த்து இருக்கிறார்களா என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

வாகனத்தின் மேற்கூரையை நன்றாக பார்த்துக் கொள்ளவும் ஏனென்றால் இதை அதிக நபர்கள் பார்க்க தவறிவிடுகின்றனர்.இதனால் நம் பிற்காலத்தில் அதிக செலவு செய்ய நேரிடும்.

மகேந்திரா ஸ்கார்பியோ பயன்படுத்தப்பட்ட கார் நீங்கள் ஒரு வியாபாரி இடமோ அல்லது கார் விற்பனை செய்பவரிடம் நேரடியாக வாங்கினாள் இந்த விஷயங்களை முதலில் செய்து பாருங்கள். வண்டியின் தன்மை மற்றும் தரம் முழுவதுமாக தெரிந்துவிடும் இதைப் பார்க்க தவறினால் நம்மளுடைய முதல் மிகவும் பாதிக்கும். நீங்கள் எடுக்கும் ஆசையான உங்கள் கார் இந்தப் பார்க்கும் திறனை பார்ப்பது நல்லது.

வாகனத்தின் அடிப்பகுதியில் பிளாட்பார்ம் என்று சொல்லக்கூடிய அனைத்து ஸ்டில்களையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் அதில் அடிக்கடி தண்ணீர் படுவதால் அரிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கும். இவ்வாறே சின்னச்சின்ன விஷயங்களில் நாம் பார்ப்பது மூலம் நம் பண விரயங்கள் நிறைய தடை செய்யப்படுகிறது.

மகேந்திரா பயன்படுத்தப்பட்ட கார்கள் எந்த வருடம் எடுத்தால் நல்லது

 பயன்படுத்தப்பட்ட கார்களை பொருத்தவரை 2005 வருடங்களுக்குப்பிறகு 2010 வருடங்களுக்கு முன் இடைப்பட்ட மகேந்திரா கார் மட்டுமே மறுமதிப்பீடு என்பது அதிகமாக கிடைக்கும்.

அதிலும் சில நுணுக்கங்கள் இருக்கின்றன குறிப்பாக சொல்லப்போனால், மகேந்திரா ஸ்கார்பியோ வின் பின்புறம் Tile lamb assembly என்று சொல்லக்கூடிய வாகனத்தின் இண்டிகேட்டர்கள் பின் பகுதியில் அனைத்து இடங்களில் மேல் வரை இருக்க வேண்டும். அவ்வாறாக இருக்கும் கார்களை மறு மதிப்பீடு என்பது அதிகம். எனவே இண்டிகேட்டர்கள் மேல்வரை இருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ வாங்கினால் மறுமதிப்பீடு கம்மியாக இருக்கும் முழுவதுமாக பதிக்கப்பட்டிருக்கும்.

பழைய வகை மகேந்திரா ஸ்கார்பியோ கார்களில் Tile lamp என்பது மிகச் சிறியதாக இருக்கும்.இந்த வகை பயன்படுத்தப்பட்ட மகேந்திரா ஸ்கார்பியோ ளுக்கு மறுமதிப்பீடு மிகக் குறைவு, வருடங்கள் அதிகமான வண்டியில் இந்த Tile lamp அளவு அதிகமாக இருக்கும் இதற்கு மார்க்கெட் மறு மதிப்பீடு அதிகமாக இருக்கும்.

பழைய மாடல் மஹிந்திரா பயன்படுத்தப்பட்ட கார்களின் Tile lamb  அசெம்பிளி செய்யமுடியுமா

கடந்த வருடங்களில் இருக்கும் மகேந்திரா பயன்படுத்தப்பட்ட கார்களில் பின்பகுதியில் Tile lamp திரும்ப அசெம்பிளி செய்யலாம்.

ஏனென்றால் பயன்படுத்தப்பட்ட மஹிந்திரா கார்களில் இன்ஜின் மற்றும் பின் பகுதி அழகாக இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பார்.நீங்கள் பழைய ரக பயன்படுத்தப்பட்ட மகேந்திரா ஸ்கார்பியோ வைத்திருந்தாள் அதன் பின் பகுதியில் tile lamp மிகச் சரியாக இருந்தால் அதனை டிங்கர் ஒர்க் பார்க்கும் நபரிடம் கொடுத்து Tile lamp மாற்றி அதனை மறுமதிப்பீடு அதிகமான விலைக்கு விற்கலாம்.

நான்குபுறமும் ஜன்னல்களில் சன்செட் அதனையும் வாங்கி ஒட்டிவிட்டால் மஹிந்திரா பயன்படுத்தப்பட்ட காரின் பழைய மாடல்களாக இருந்தாலும் அதன் மறு மதிப்பீடு அதிகமாக இருக்கும். பார்ப்பவர்களுக்கும் மகேந்திரா ஸ்கார்பியோ கார்களை அதிகமாக பிடிக்கும்.

வண்டியின் முகப்பு பகுதியில் பேனட் அடிப்பகுதியில் கவர் இருக்கும் அது அதிகமான இன்ஜின் வெப்பத்தினால் கிலீ வதற்கான வாய்ப்பு இருக்கும். அதனையும் நன்றாக பார்த்து எடுக்க வேண்டும். எலிகள் மற்றும் பூச்சிகள் தொல்லையினால் அந்தக் அவர் அதிகமாக பாதிப்படையும். அதனையும் அவ்வப்போது சரி செய்து கொள்வது நல்லது.

மகேந்திரா ஸ்கார்பியோ பயன்படுத்தப்பட்ட கார்கள் மைலேஜ் எவ்வளவு கொடுக்கும்

மஹிந்திரா ஸ்கார்பியோபயன்படுத்தப்பட்ட பொறுத்தவரை 2012 மாடல் களுக்கு முந்தைய மாடல்கள் ஒரு லிட்டருக்கு 16 கிலோமீட்டர் வரை கொடுக்கும். 2012 மாடல்களுக்கு புது மாடல்கள் கிலோமீட்டர் என்பது மிகக் குறைவாக தான் கொடுக்கும்.

எந்த வகை ஆப்ஷன் இருந்தால் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ வாகனம் சிறந்தது

  • பவர் ஸ்டியரிங்
  • பவர் விண்டோ
  • ஏசி
இவை அனைத்தும் இருக்கக்கூடிய மஹிந்திரா பயன்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ வாகனங்களை வாங்குவது சிறந்தது. பழைய tile lamp அசெம்பிளி இருந்தால் அதனை நாம் புதுப்பித்து விடலாம். பழைய மாடல்கள் கார் வாங்கினால் அதில் பவர் விண்டோ வைப்பதற்கு சிறிய செலவு செய்துவிட்டு அதனையும் மறுமதிப்பீடு அதிகமாக செய்யலாம்.

நீங்கள் ஸ்கார்பியோ பயன்படுத்தப்பட்ட கார் வைத்திருந்தால் முதலில் தினம்தோறும் வாகனத்தை சுத்தம் செய்வது மிகவும் நல்லது.இன்ஜின் பகுதியில் டைனமோ பகுதியிலிருந்து பேட்டரிக்கு சார்ஜ் ஆகிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். விளக்குகள் ஹாரன் அனைத்தும் வருகிறதா என்பதை பார்க்க வேண்டும் ஓடோமீட்டர் சரியாக ஓடுகிறதா என்பதை பார்க்க வேண்டும்.

இந்த பதிவில் பார்த்த அதே போல நீங்களும் பயன்படுத்தப்பட்ட மகேந்திரா ஸ்கார்பியோ வாங்க நினைத்தால் இந்த முறையைப் பயன்படுத்தி நல்ல ஒரு காரை வாங்கிக் கொள்ளலாம்.மற்றும் கார் வைத்திருப்பவர்கள் எவ்வாறு பராமரிப்பது என்பதையும் இந்த பதிவில் பார்த்திருப்பீர்கள் மேலும் உங்களுக்கு ஏதாவது கார்களை எப்படிப் பார்த்து வாங்குவது என்பது தெரியவில்லை என்றால் அதனை கமெண்ட் பகுதியில் தெரிவிக்கவும் .அதற்கான பதிவு விரைவில் பதிவிடப்படும்.

இதனை வீடியோவாக பார்க்க இந்த லிங்கை கிளிக் HOW TO CHECK SCORPIO      செய்யவும்






1 கருத்துகள்

கருத்துரையிடுக