கார்களில் RPM மீட்டரை பார்த்து வாகனம் ஓட்டுவது நல்லதா

ஆர்பிஎம் மீட்டரை பார்த்து கார் எதற்கு ஓட்ட வேண்டும்


ஆர்பிஎம் மீட்டர் என்றால் என்ன அதன் பயன்கள் என்ன

ஒவ்வொரு காரியின் உடைய டேஷ்போர்டில் ஸ்பீடா மீட்டர் மற்றும் ஆர்பிஎம் மீட்டர் இருக்கும். ஆர்பிஎம் என்பது revolution per minute. காரின் உடைய கிராண்ட் ஷாப் ஒரு நிமிடத்தில் எத்தனை முறை சுழல்கிறது என்பதனை காண்பிப்பது ஆர்பிஎம் மீட்டரில் வேலை.

ஆர்பிஎம் மீட்டரில் பார்த்து ஏன் கார் ஓட்ட வேண்டும்

ஆர்பிஎம் மீட்டரைப் பார்த்து கார் ஓட்டுவது பழக்கத்திற்கு கொண்டு வருவது நல்லது. ஏனென்றால் ஒரு ஸ்பீடா மீட்டரில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போம் அதேபோல் இந்த ஆர்பிஎம் மீட்டரில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
ஒரு காரில் அதிகபட்சம் 8000 ஆர்பிஎம் எஞ்சின் திறன் கொண்டது என்று எடுத்துக் கொண்டால் அதில் 7000 to 8000 ஆர்பிஎம் என்பது டேஞ்சர் போசிஷன்.

8000 ஆர்பிஎம் என்று கொடுக்கப்பட்டுள்ள வாகனத்தில் அந்த ஆர்பிஎம் இன் லெவல் பாதிக்குப் பாதி 50% அதாவது 4,000 ஆர்பிஎம் என்பதே மிகச்சரியான லெவல் . இந்த 4000 ஆர்பிஎம் தொடும் பொழுது நமது வாகனம் 120 கிலோமீட்டர் வேகத்தை ஐந்தாவது கியரி ல் எட்டும்.

இதில் 4,000 ஆர்பிஎம் எட்டிய பின் நான்காவது கியர் அல்லது மூன்றாவது கியர் வேகத்தில் 120 அல்லது 130 கிலோ மீட்டரை எட்டுவது இன்ஜினுக்கு உகந்தது அல்ல. 4000 ஆர்பிஐம்மியும் தாண்டி ஆறாயிரம் ஏழாயிரம் எட்டாயிரம் கடந்துவிட்டால் அது இன்ஜினுக்கு மிக மோசமான விளைவை ஏற்படுத்தும். இன்ஜினில் அதிகமான அதிர்வு உண்டாகும். இதனை ஒரு வாகனத்தை முந்துவதற்கு இந்த வேகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் ஆனால் இதே வேகத்தை தொடர்வது இன்ஜினுக்கு நல்லது அல்ல. (4 ஆயிரம்  ஆர்பிஎம் லெவலில் அஞ்சாவது கியரில் செல்லலாம் ஆனால் நாலாவது கியரில் போனால் முன்னே சொன்னது செயல்படும்)

ஆர்பிஎம் மீட்டரை பார்த்து ஓட்டுவதால் நிகழும் நன்மைகள்

கார்களின் இன்ஜினின் வாழ்நாள் அதிகரிக்கும். பின் என்னுடைய பகுதிகள் அனைத்துமே ஒரே போல் இயங்கும் அதனால் இன்ஜினின் வாழ்நாள் மிகமிக அதிகரிக்கும்.

காரில் இருக்கும் நபர்கள் ஒரு சௌகரியமான சூழலை உணர்வர் டிரைவிங் பண்ணக்கூடிய சமயத்தில், ஒரு சிறந்த நல்ல டிரைவர் என்றால் இதனை பார்த்து வாகனம் ஓட்டுவது மிகச் சிறந்தது வருங்காலத்தில் எந்த வாகனமாக இருந்தாலும் உங்கள் கைகளில் வரும் பொழுது அதனுடைய இன்ஜினின் வாழ்நாள் மிக அதிகரிக்கும் மற்றும் ஒரு சிறந்த டிரைவர் என்ற பெயர் கிடைக்கும்

இஞ்சின் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது

உதாரணமாக நீங்கள் ஒரு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பொழுது உங்களுடைய ஆர்பிஎம் மீட்டரை பாருங்கள் ஆர்பிஎம் இன் லெவல் 3000 ஆர்பிஎம் அல்லது 3500 அளவுக்கு இருக்கும். வேகமும் ஆர்பிஎம் மீட்டரும் ஆயிரம் கிலோ மீட்டர் வேகம் என்பது 3000 ஆர்பிஎம் அளவு என்பதனை உங்களது எண்ணம் சிந்தனை படுத்துக்கொள்ளும். இதனைத் தொடர்ந்து செய்யும்பொழுது மிகச்சிறந்த டிரைவிங் அனுபவம் கிடைக்கும்.இதனை நீங்கள் கருத்தில் கொண்டு வாகனம் ஓட்டினால் நீங்கள் எப்போது வாகனம் ஓட்டினாலும் அந்த ஆர்பிஎம் மீட்டரை தானாக  பார்த்து வாகனம் ஓட்ட ஆரம்பித்து விடுவீர்கள்.
tamil24caars

நம்மில் அனைவருக்குமே டிரைவிங் என்பது அலாதி பிரியம் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கார் ஓட்டும் ஸ்டைல் இருக்கும். ஒவ்வொருத்தரும் 100 முதல் 120 கிலோ மீட்டர் வரை செல்லலாம் என்று ஒவ்வொரு மனநிலை இருக்கும். உதாரணமாக இளைஞர்கள் என்று எடுத்துக்கொண்டால் 140 கிலோமீட்டர் வேகத்தை அவர்களால் தன் கட்டுக்குள் கொண்டுவர முடியும் ஆனால் முதியவர்கள் 60 கிலோ மீட்டர் வேகம் என்பதனை தன் கட்டுக்குள் வைத்திருப்பர் , எனினும் அனைவரும் ஓடோ மீட்டரை பார்த்து வாகனம் ஓட்டாமல் இந்த ஆர்பிஎம் பார்த்து வாகனம் ஓட்டுவது நல்ல ஒரு டிரைவிங் அனுபவத்தைக் கொடுக்கும்.

இதை நீங்கள் உடனே கற்றுக்கொள்வது கடினம் ஆனால் இன்றிலிருந்து அந்த ஆர்பிஎம் மீட்டரை கவனித்து நாம் எவ்வளவு கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறோம் ஆர்பிஎம் லெவல் எவ்வளவு வேகம் காண்பிக்கிறது என்பதையும் பார்த்துக்கொண்டாள் பிற்காலத்தில் எளிமையாக வாகனம் சிறந்த முறையில் ஓட்டலாம். ஏனென்றால் ஒவ்வொரு நபரும் ஒவ்வொருவிதமான டிரைவிங் குணத்தை கொண்டிருப்பர். முதல் கியரில் இருந்து இரண்டாவது கியருக்கு மாறும்பொழுது 20 கிலோ மீட்டர் வேகத்தில் மாற்றுபவர் அதிக நபர்கள் உண்டு ஒரு சில நபர்கள் 10 கிலோ மீட்டர் வேகம் எட்டியதும் இரண்டாவது கியர் மாற்றிவிடுவார். முதல் கியர் மற்றும் இரண்டாவது கியரில் அதிகமான ஆக்சிலேட்டர் கொடுத்து ஆர்பிஎம் லெவலை அதிகப்படுத்துவது இன்ஜினுக்கு உகந்தது அல்ல.எனவே நீங்கள் ஆர்பிஎம் மீட்டரைப் பார்த்து வாகனம் ஓட்டுவது மிகச் சிறந்தது.

எனவே நீங்கள் இனி வாகனம் எடுத்தாலும் முன்னதாக உங்களிடம் வாகனம் இருந்தாலும் இனி வாகனம் ஓட்டும்போது ஆர்பிஎம் மீட்டரை பார்த்து வாகனம் ஓட்டுவதை வழக்கமாக கொண்டு வாருங்கள் இதனால் உங்களுடைய காரின் மைலேஜ் திறன் அதிகரிக்கும் மற்றும் இன்ஜின் வாழ்நாள் மிக மிக அதிகரிக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன் பிடித்திருந்தால் இந்த பதிவினை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் இதுபோன்ற கார்கள் சம்பந்தமான உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் தாராளமாக கமெண்டில் பதிவு செய்யுங்கள்

கருத்துரையிடுக