How to remove cars and bikes hypothecation in Tamil

Hypothecation என்றால் என்ன பயன்படுத்தப்பட்ட கார் வாங்கும்போது இந்த Hypothecation எவ்வாறு பார்த்து வாங்குவது

Hypothecation என்றால் என்ன பயன்படுத்தப்பட்ட கார் வாங்கும்போது இந்த Hypothecation எவ்வாறு பார்த்து வாங்குவது  மற்றும் அதனை எவ்வாறு Remove செய்வது என்பதை பற்றியும் இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Hypothecation என்றால் என்ன?

நீங்கள் ஒரு வாகனம் வாங்கும் பொழுது அதற்கு பேங்க் அல்லது தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தால் உங்களுடைய வாகனத்தை எடுத்துக்கொள்ளாமல் அதற்கு பதில் உங்களுடைய ஆசி புக்கில் ஹைபோதெகேஷன் அதாவது வாகனத்தின் முழு உரிமை அந்த கடன் தந்த வரை சேரும் என்பதை விளக்கும் வகையில் ஒரு அச்சு பொறிக்கப்பட்டிருக்கும். நீங்கள் பயன்படுத்திய பின் கார்களை விற்க விரும்பினால் முதலில் அதன் மேல் கடன் தொகை இருந்தால் அதனை செலுத்தி அந்த ஹைபோதெகேஷன் ஆர்சி புக்கிலிருந்து ரிமோ செய்ய வேண்டும்.

நீங்கள் காரை விற்க விரும்பினாலோ அல்லது கார் மாற்ற விரும்பினால் முறையாக இந்த ஹைபோதெகேஷன் ரெமோ  செய்தால்தான் கார் வாங்குவோம் விற்பனையை செய்ய முடியும். கார் வாங்க நினைப்பவர்கள் ஆர்சி புக் இல் இந்த ஹைபோதெகேஷன் ரிமோட் செய்திருக்கிறார்களா என்பதை கன்ஃபார்ம் செய்து கொள்ள வேண்டும்.

Hypothecation Remove செய்வது எப்படி

பேங்க் அல்லது தனியார் நிறுவனத்தின் மூலம் கடன் வாங்கி கார் வாங்கியிருந்தால்  ஹைபோதெகேஷன் என்பது உங்களுடைய ஆர்சி புக்கில் பதிவு செய்யப்பட்டிருக்கும். நீங்கள் முழு தொகை செலுத்திய பிறகும் உங்களுடைய  வீட்டிற்கு கடன் செலுத்தியதற்கான ரிசிப்ட் மற்றும் என்ஓசி வந்துவிடும். ஆனால் இவை மட்டும் இருந்தால் போதாது. ஆர்சி புக்கில் இருக்கக்கூடிய ஹைபோதெகேஷன் அச்சு எடுக்க வேண்டும். நிறைய பேர் இதனை மறந்து விடுகின்றனர்.

இதை எளிமையாக எடுத்துவிடலாம் இதற்கு ஆன்லைன் மூலம் வெப்சைட்கள் இருக்கிறது அதன் மூலம் நாம் விண்ணப்பம் அளித்து நேரடியாக ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பொழுது ஒரு மாதத்திற்குள் நமக்கு புதிய ஆர்சி புக் கிடைக்கிறது.

 ஹைபோதெகேஷன் ரிமூவ் செய்ய ஆர்டிஓ ஆபீஸ்க்கு என்னென்ன டாக்குமெண்ட்ஸ் கொண்டு செல்ல வேண்டும்

  • Bank NOC Certificate (original)
  • Form 35 Original
  • Bank loan end letter

கடன் தொகையில் நீங்கள் வாகனம் வாங்கியிருந்தால் இந்த மூன்று டாகுமெண்ட்களை உங்கள் வீட்டிற்கு அனுப்பி இருப்பார்கள். ஆன்லைன் ஹைபோதெகேஷன் என்ஓசி மற்றும் கடன் தொகை கட்டி முடித்தவுடன் ஒரு லெட்டர் இந்த இரண்டும் ஒரே டாகுமெண்ட்டில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. எப்படி இருந்தாலும் பரவாயில்லை அதனையும் கொண்டு செல்ல வேண்டும்.

  • Rc Book Original
  • Insurance Xerox copy
  • Pollution Certificate
  • Online payment receipt

online payment receipt எங்கே வாங்குவது என்றாள் transport commissionerate and state transport authority இந்த இணையதளத்தில் என்னென்ன டாக்குமெண்ட் வேண்டும் என்பதை தெளிவாக விளக்கியுள்ளனர் நாம் மேலே சொன்ன அனைத்து டாக்குமெண்ட்ஸ் களும் தேவை.
பரிவஹன் சீவா இந்த இணைய தளத்தின் லிங்க் அந்த இணைய தளத்தில் இருக்கும் அல்லது நீங்கள் முறையாக பரிவஹன் சீவா என்று கூகுளில் சர்ச் செய்து அந்த இணையதளத்தில் உங்களுடைய வாகனத்தின் நம்பர் கொடுத்து மொபைல் நம்பர் கொடுத்து உள்நுழைந்து
நாம் குறிப்பிட்ட அனைத்து Documents களையும் அப்ளிகேஷனில் Submit செய்து பணம் கட்ட வேண்டும் அவ்வாறு பணம் கட்டிய பின் Receipt வழங்கப்படும் அந்த Receipt சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ெப்சைட் மூலம் எவ்வாறு எடுப்பது என்பது பற்றி நம்முடைய யூடியூப் சேனலில் தெளிவாக பதிவிட்டு இருக்கிறோம் அதனுடைய லிங்க் கிளிக் செய்து பார்க்கவும் link..

ஆன்லைன் பேமென்ட் கட்டியபின் எடுக்கக்கூடிய ரிசிப்ட் 2 ரிசிப்ட் எடுக்கவேண்டும் அதில் ஒரு ரிசிப்ட் மற்றும் மேலே கொடுக்கப்பட்டுள்ள டாக்குமெண்ட்ஸ் கள் அனைத்தையும் சேர்த்து பின் செய்து ஆர்டிஓ அலுவலகத்தில் கொண்டு ஒப்படைக்க வேண்டும். ஆர்டிஓ அலுவலகத்தில் எந்தவிதமான தொகையும் செலுத்த தேவையில்லை. உங்களுடைய ஒரிஜினல் ஆர்சி புக்கையும் கொடுக்கவேண்டும்

எவ்வாறு புதிய ஆர்சி புக்கை பெறுவது

ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்குள் உங்களது புது ஆர்சி புக்கை வாங்கி வரச் சொல்வார்கள். இதை வாங்க ஆன்லைனில் பேமென்ட் செலுத்திய ரிசிப்ட் இரண்டு எடுத்ததில் மற்றும் ஒன்றைக் கொண்டு காண்பித்து இந்த புது ஆர்சி புக் அல்லது ஸ்மார்ட் கார்டை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முறையில் உங்களது கார்களை பைக்குகளை லோன் மூலம் வாங்கியிருந்தால் ஹைபோதெகேஷன் உங்கள் ஆட்சி புக்கிலிருந்து இவ்வாறு ரிமூவ் செய்து விடலாம். இவ்வாறு உங்கள் ஆர்சி புக்கில் இருக்கக்கூடிய ஹைபோதெகேஷன் அச்சுவை எடுத்து வாகனத்தை விற்பதும் வாங்குவதும் சிறந்தது.

மேலும் இதுபோன்ற அனைத்து வகையான பைக் மற்றும் கார்களின் முறையான விபரங்கள் அறிய நம்மளுடைய வெப்சைட்டில் ஃபாலோ செய்து கொள்ளுங்கள்


கருத்துரையிடுக