மற்ற மாநில கார்களை வாங்கி தமிழ்நாடு பதிவு செய்வது எப்படி Tamil24cars

மற்ற மாநில பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி தமிழ்நாட்டில் பதிவுசெய்து ஓட்ட முடியுமா

இந்தப் பதிவில் மற்ற மாநில பயன்படுத்தப்பட்ட கார்களை தமிழ்நாட்டில் வாங்கி அதனை பதிவு செய்து வாகனத்தை பயன்படுத்த முடியுமா என்பதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மற்ற மாநில வாகனங்களை வாங்கி அதனை நம்மால் தமிழ்நாட்டு பதிவு நம்பர் வாங்கி ஓட்ட முடியும்.ஆனால் நீங்கள் எந்த மாநிலத்தில் இருந்து வாகனம் வாங்குகிறார்களோ அங்கிருந்து சில டாக்குமெண்ட்ஸ் வாங்கி வரவேண்டும். அதன் விபரங்கள் பின்வருமாறு

  • Rc Book
  • NOC (online NOC)
  • Invoice bill
  • Insurance ( No)

எந்த மாநிலத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட கார் வாங்குகிறீர்களா அந்தக் காரின் RC BOOK என்பது மிக அவசியம் அதில் உரிமையாளரின் பெயர் உண்மையாக பொறிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

எந்த மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட கார் வாங்குகிறீர்களா அந்த கார் பதிவு செய்யப்பட்டிருக்கும் RTU அலுவலகத்தில் இருந்து ஆன்லைன் மூலம் பெறப்பட்ட என்ஓசி வாங்க வேண்டும் அந்த ONLINE NOC இல் உங்களுடைய முகவரி நீங்கள் எங்கே பதிவு செய்ய வேண்டும் RTO அலுவலகத்தில் என்பதனையும் குறிப்பிட்டிருக்கும் எந்த இடத்திலிருந்து விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் குறிக்கும் ONLINE NOC கண்டிப்பாக வாங்க வேண்டும்

எந்த மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட கார் டீலரிடம் கார் வாங்கினாலும் அதை வாங்கியதற்கான INVOICE BILL கண்டிப்பாக வாங்கி வரவேண்டும் அதில் விற்பனை செய்தவரின் கடையின் முகவரி மற்றும் நீங்கள் என்ன தொகை செலுத்தி கார் வாங்கினீர்கள் என்பதனையும் பதிவு செய்திருக்க வேண்டும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தொகை மிக முக்கியம்.

இன்ஷூரன்ஸ் கட்டாயம் தேவையா

மற்ற மாநிலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட கார்களை நாம் வாங்கும் போது அதனுடன் இன்சூரன்ஸ் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை அவ்வாறு கட்டாயம் வாகனத்தின் இன்சுரன்ஸ் இருந்தால் அதனை மாற்றி தருவதற்கான ஒப்புதல் ஃபார்ம் அதிலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும்.

இவை மூன்றும் இருந்தால் முறையாக ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார்களை விற்கலாம் வாங்கலாம்.

மற்ற மாநிலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி வரும் பொழுது அதனுடன் இந்த மூன்று டாக்குமெண்டை யும் வாங்கி வந்த பிறகு அதனை நமது அருகில் உள்ள ஆர்டிஓ ஆபீஸ் இல் கொடுத்து நம் காரை கொண்டு சென்று காண்பிக்க வேண்டும். பின்னர் இரண்டு மாதங்கள் வரை ஆர்சி புக் சரிபார்ப்பு மற்றும் வாகனத்தின் மேல் ஏதாவது அந்த மாநிலத்தில் ஆக்சிடென்ட் வரலாறு உள்ளதா என்பதை விசாரிப்பார்கள். அவை எல்லாம் முடித்துவிட்டு உங்களுடைய பெயருக்கு பெயர் மாற்றப்படும். அதற்கு முன்னதாக நீங்கள் அங்கே வாங்கி வந்த இன்வாய்ஸ் பில் என்ன தொகை இருக்கிறதோ அதற்கு நமது மாநிலத்திற்கு TAX (வரி) கட்ட வேண்டியிருக்கும் வரியின் விகிதம் 9 % அளவு இருக்கும்.

மற்ற மாநிலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும் பொழுது நினைவில் கொள்ளுங்கள் புதிய வாகனம் வாங்கும் பொழுது வரி விகிதம் எவ்வளவு செலுத்த வேண்டியிருக்குமோ அதற்கு நிகரான வரி செலுத்த வேண்டிய நிலை வரும்.

அது ஆகையால் INVOICE BILL தொகையை குறைத்து வாங்கி வந்தால், அந்த விலைக்கு நாம் வாகன வரி செலுத்தினால் போதும்.

குறைந்தபட்சம் ஒரு வாகனம் வாங்கினால் சுமார் இரண்டு மாதங்கள் வரை RTO ஆபீஸ் இல் உங்களுடைய புக் சரிபார்க்கப்பட்டு விபத்து வரலாறு அந்த மாநிலத்தில் உள்ள போலீஸ் அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டு அந்தப் பதிவினை ஏற்றுக்கொண்டு உங்களுடைய பெயருக்கு ஆர்சி புக் மாற்றம் செய்யப்படும்.

நீங்கள் நேரடியாக ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று உங்களுடைய டாக்குமெண்ட் மற்றும் உங்களுடைய காரினை நேரடியாக காண்பிக்க வேண்டும் ஒரு புதிய வாகனம் வாங்கும் பொழுது என்ன சட்டம் இருக்கிறதோ அதே சட்டங்கள் இந்த காருக்கும் வரி விகிதங்கள் மாறுபட வாய்ப்பு உள்ளது.உங்கள் கார்களுக்கான புதிய நம்பர் தமிழ்நாடு ரிஜிஸ்டரில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படும். அந்த நம்பரை நீங்கள் வாகனத்தின் முன்பகுதியில் வைக்கவேண்டும்.

மற்ற மாநிலத்தில் இருந்து கார்கள் வாங்குவது விலை குறைவு என்பதனால் மிக மிக குறைந்த விலையில் கார்கள் வாங்கினாள் நம் கார்கள் சந்தையில் நல்ல மதிப்பிற்கு கார்களை விற்கலாம்.

இனி மாற்ற மாநிலத்தில் இருந்து  பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும்பொழுது மேலே சொன்ன அனைத்து டாக்குமெண்ட்ஸ் களையும் சரி பார்த்து வாங்கி வரவும்.

இந்தப்பதிவில் மற்ற மாநிலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி நமது மாநிலத்தில் நமது பெயரில் பெயர் மாற்றம் செய்து வாகனம் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி விரிவாக விளக்கி உள்ளேன் இந்த பதிவு தங்களுக்கு உதவும் என நம்புகிறேன் .இது போன்ற மேலும் பல ஆட்டோமொபைல் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்புகிறேன் .மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்

video link :

கருத்துரையிடுக