How to check smart Card RC tamil24 cars

 வாகனத்திற்கான ஸ்மார்ட் கார்டு ஆர்சி எப்படி பார்த்து வாங்குவது



ஆர்சி புக் பேப்பர் வடிவிலிருந்து பிளாஸ்டிக் கார்டு வடிவமாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதில் நிறைய பேருக்கு இந்த ஸ்மார்ட் கார்டு ஆர்சி எப்படிப் பார்த்து வாங்குவது என்று தெரிவதில்லை. இந்தப் பதிவில் ஸ்மார்ட் கார்டு ஆர்சி எப்படி பார்த்து வாங்குவது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.


ஸ்மார்ட் கார்டு ஆர்சி எப்படி இருக்கும்

ஸ்மார்ட் கார்டு ஆர்சி பிளாஸ்டிக் அட்டை வடிவில் ஏடிஎம் கார்டு அளவில் இருக்கும். இந்த இந்த ஸ்மார்ட் கார்டில் வாகனத்தின் எண் வாகனத்தின் உரிமையாளர் வாகனத்தின் உரிமையாளர்களின் முகவரி ஹைபோதெகேஷன் மற்றும் இன்ஜின் நம்பர் ஜேஸ் நம்பர் அனைத்து முழுமையான தகவல்களும் இருக்கும்.


             ஸ்மார்ட் கார்டில் முதல் பகுதியில் வாகனத்தின் ரிஜிஸ்டர் செய்த எண்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்தப் பதிவு செய்யப்பட்ட எண்களும் வாகனத்தின் முன் பகுதியில் இருக்கும் எண்களும் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும்.



               இரண்டாவது வாகனத்தின் சேஸ் நம்பர் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த செல் நம்பரும் வாகனத்தின் மேல் பகுதியில் அல்லது இன்ஜின் பகுதியில் அப்பர் ஆம்ஸ் பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும் செஸ் நம்பரும் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும். இதனையும் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.



              மூன்றாவது வாகனத்தின் இன்ஜின் நம்பர் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த நம்பரும் இன்ஜின் பகுதியில் இன்ஜினில் எழுதப்பட்டிருக்கும் நம்பரும் ஒரே போல் இருக்கிறதா என்பதை பார்த்து கவனமாக எடுத்துக் கொள்ளவும்.



                நான்காவது ஸ்மார்ட் கார்டில்  வாகனத்தின் உரிமையாளரின் பெயர் மற்றும் அதன் கீழ் முகவரி பதிவு செய்யப்பட்டிருக்கும் அதனையும் பார்த்து சரி பார்த்துக்கொள்ளவும்.



                ஸ்மார்ட் கார்டில் வலது பக்கத்தில் வாகனம் பதிவு செய்யப்பட்ட நாள் மாதம் வருடம் பதிவு செய்யப்பட்டிருக்கும் அதன் கீழ் வாகனத்தின் பதிவு முடிவு பெறும் நாள் மாதம் வருடம்பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனையும் பார்த்து சரி பார்த்துக் கொள்ளவும்.


                   ஸ்மார்ட் கார்டில் வலதுபக்கத்தில் வாகனத்தின் உரிமையாளர்கள் எத்தனை நபர்கள் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு அதனைப் பார்த்து வாகனத்தின் உரிமையாளர்கள் எத்தனை பேர் என்பதனை பார்த்து வாங்கவும்


                   ஸ்மார்ட் கார்டில் வலதுபக்கத்தில் வாகனம் முடிவு பெறும் தேதிக்கு கீழ் கியூ ஆர் கோட் பதிவு செய்யப்பட்டிருக்கும் இதனை ஸ்கேன் செய்தாலும் வாகனத்தின் முழு தகவல்கள் தெரிய வரும்.



                   ஸ்மார்ட் கார்டின் வலதுபக்கத்தில் கீழிருந்து மேலாக ஒரு ஓரத்தில் HPA என பதிவு செய்யப்பட்டிருந்தால் ஹைபோதெகேஷன் அதாவது இந்த வாகனம் ஃபைனான்ஸ் மூலம் வாங்கப்பட்டது பைனான்ஸ் இன்னும் இருக்கிறது என்று அர்த்தம்.


                  HPA என்பதற்கு பதிலாக HPT என பதிவு செய்யப்பட்டிருந்தால் ஹைபோதெகேஷன் டெர்மினேட் செய்யப்பட்டுவிட்டது. என்று அர்த்தம் அதாவது பைனான்ஸ் இருந்து பைனான்ஸ் கட்டி முடிக்கப்பட்டது என்று அர்த்தம். அருகில் To என பொறிக்கப்பட்டு இருந்தாள் வாகனத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும் பொழுது ஆர்சி புக் வடிவில் இருந்து பிளாஸ்டிக் வடிவில் மாற்றப்பட்டது என்று அர்த்தம்.



                 உதாரணமாக புதியவகை வாகனங்களில் முதல் ரிஜிஸ்டர் பதிவில் இந்த TO  என பொறிக்கப்பட்ட இருக்காது. வாகனத்தின் ஒரு உரிமையாளரிடமிருந்து இன்னொரு உரிமை அளவிற்கு மாற்றம் செய்யப்படும் பொழுது TO என பொறிக்கப்படும்.


               பிளாஸ்டிக் ஸ்மார்ட் கார்டில் முன்பகுதியில் இவை அனைத்தையும் சரி பார்த்துக் கொள்ளவும் ஸ்மார்ட் கார்டில் அடுத்த பின் பகுதியில் வாகனத்தின் இதர விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் அதனையும் பார்த்து தெரிந்து கொள்ளவும். ஒரு பழைய வாகனம் வாங்கும் பொழுது பிளாஸ்டிக் வடிவில் இருக்கும் ஸ்மார்ட் ஆர்சி கார்டில் முன் பகுதியில் இருக்கும் விவரங்களை முழுமையாக சரிபார்க்கவும்.


 பின்பகுதியில் இருக்கும் விவரங்கள்


                  ஸ்மார்ட் கார்டில் பின்பகுதியில் வாகனத்தின் கம்பெனி வாகனத்தின் பெயர் வாகனத்தின் கலர் வாகனத்தின் பியூல் வாகனத்தின் டாக்ஸ் நிலவரம் அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும் அதனையும் சரிபார்த்துக் கொள்ளவும்.


                இந்தப் பதிவில் ஸ்மார்ட் கார்ட் ஆர்சி எப்படி பார்த்து வாங்குவது என்பதனைப் பற்றி விரிவாக பதிவு செய்திருக்கும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள் இது போன்ற வாகனம் சம்பந்தமான பல சந்தேகங்களுக்கு நமது வெப்சைட்டினை பாலோ செய்யுங்கள்



கருத்துரையிடுக