வாகனங்கள் விலை 30% வரை குறைய வாய்ப்பு உள்ளது மத்திய அரசின் புதிய திட்டம்

Goverment New scheme

30 % வாகனங்களின் விலை குறைப்பு மத்திய அரசின் புதிய திட்டம்


மத்திய அரசு நாடாளுமன்றத்தில் புதிய வாகன சட்டம் ஒன்றை வரையறுத்துள்ளது.30% வரை வாகனங்களின் விலை குறைய அதிக வாய்ப்பு உள்ளது.



 இச்சட்டத்தின்படி Bs3 மற்றும் Bs4 ரக வாகனங்கள் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் பரிந்துரையின்படி பழைய பயன்படுத்த பட்ட வாகனங்களை  அதற்கென தனியாக அமைக்கப்பட்ட நிலையங்களில் கொடுத்துவிட்டு புதிய கார்களை வாங்கும் நபர்களுக்கு 30% வரை புதிய வாகன பதிவின்போது சலுகைகள் வழங்கப்பட உள்ளது இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.


புதிய கார்கள் தயாரிக்க ஆகும் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை இந்த வகை பழைய கார்களை வாங்கும் நிலையங்கள் மூலம் திரும்ப மறுசுழற்சிக்கு கார்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்குவதால் புதிய கார்களின் விலை குறைவாக வாய்ப்புள்ளது.


மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள விதிமுறையின்படி காற்று மாசுபடுதலை தவிர்க்க பழைய வாகனங்களை ஸ்கிராபெட் கொள்கையின்படி ஸ்கிரப் செய்ய அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவித்துள்ளனர்.



இவ்வாறு வாங்கப்படும் பழைய கார்களை மறு சுழற்சிக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனால் கார் தயாரிக்க மூலப் பொருள்களை இந்த பயன்படுத்தப்பட்ட கார்களில் இருந்து எடுப்பதனால் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வாய்ப்புள்ளது.



எனவே இச்சட்டம் விரைவில் அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது.இச்சட்டத்தின் மூலம் புதிய கார்களை வாங்க நினைப்பவர்களுக்கு கார் வாங்கிய பின் பதிவு செய்ய கட்டணம் முற்றிலும் இலவசம் மேலும் கார்களின் மொத்த தயாரிப்பு செலவும் குறைவதனால் புதிய கார்களின் விலை 30 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது


மாசு கட்டுப்பாடு வாரியம் விதிக்கப்பட்ட விதியும் மாசுவை கட்டுக்குள் கொண்டுவர இந்தத் திட்டம் மிகச் சிறந்த திட்டம்.


கருத்துரையிடுக