லைசன்ஸ் இனி தேவையில்லை மத்திய அரசின் புதிய திட்டம் தமிழ் 24 கார்ஸ்

 லைசென்ஸ் தேவையில்லை மத்திய அரசின் புதிய சட்டம் திருத்தம்

மோட்டார் வாகன சட்டத்தில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது இதன் மூலம் இனி மற்ற வேறு வேறு மாநிலங்களுக்கு ஒரே லைசன்ஸ் என்ற அடிப்படையில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது இதனைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.


வாகனங்கள் விலை 30% குறைய வாய்ப்பு உள்ளது.........


இந்தச் சட்டம் திருத்தம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது இதன்படி டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புக் இரண்டும் ஒரே வடிவில் இருக்கும் என்பதை இச்சட்டம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

லைசன்ஸ் ஆனது மாநிலத்துக்கு மாநிலம் பல்வேறு வடிவங்களில் இருக்கும் இதனால் பல சிரமங்கள் வாகன ஓட்டிகள் இடையே இருந்தன. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான லைசன்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த லைசன்ஸ் இல் க்யூ ஆர் கோடு மற்றும் ஜிப் இனி பொருத்தப்படும்.

HOW TO CHECK SMART CARD RC      

இவ்வகை லைசன்ஸ் மூலம் குற்றங்கள் அதிகமாக குறைக்கப்படும் ஏனென்றால் இந்த லைசென்ஸ்ல் இருக்கும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் அல்லது ஜீப் மூலம் ஸ்கேன் செய்தல் அந்த நபர் இதற்கு முன்னால் அபராதம் எத்தனை முறை செலுத்தியுள்ளார் எத்தனை முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறி உள்ளார் என்பதனை அறிந்து கொள்ளலாம் எனவே குற்றங்கள் அதிக அளவில் குறைக்கப்படும் என்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.


இதன் மூலம் தவறுகளும் குறைக்கப்படும் போக்குவரத்து காவலர்களுக்கு எளிமையாக டாக்குமென்ட்களை சரிபார்க்க நேரம் குறையும்.


இச்சட்டம் போக வாகனம் சம்பந்தமான டாகுமெண்ட்ஸ் கள் அனைத்தையும் கையில் எடுத்துச் செல்லாமல் அதனை ஆன்லைனில் சாப்ட் காபி ஆக டிஜி லாக்கர் மற்றும் M பரிவாகன் அப் மற்றும் இணைய தளத்தில் அப்லோட் செய்து வைத்துக்கொள்ளலாம்.இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் போக்குவரத்து காவலர்களிடம் இந்த சாப்ட் காப்பி காண்பித்து கொள்ளலாம் என்று தற்போது தெரிவித்துள்ளனர்.


இந்த பதிவு உங்கள் அனைவருக்கும் ஒரு விரிவுரையை கொடுத்திருக்கும் இதுபோன்ற ஆட்டோமொபைல் செய்திகளை அறிந்துகொள்ள நமது பக்கத்தை தொடர்ந்து பாலோ செய்யுங்கள்.

கருத்துரையிடுக