மழைக்காலத்தில் பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்டும் முறை தமிழ்24 கார்ஸ்

 மழைக்காலத்தில் பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்டும் முறை


1.மழைக்காலங்களில் எதிரில் வரும் வண்டிகள் தெரிவதில்லை அதனால் பார்க்கிங் லைட் ,இண்டிகேட்டர் ஆன் செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமது வண்டி எதிரில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும்.



2. மழை அதிகமாக பெய்யும் நேரங்களில் வைப்பர் ஆம் ஆன் செய்து கொள்ள வேண்டும். வைப்பர் சரியான கண்டிஷனில் உள்ளதா என்று சரி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒர்க் செய்யவில்லை என்றால் எதிரில் வரும் வாகனங்கள் நமக்குத் தெரிவதில்லை.



3. மழை காலங்களில் வண்டியை மெதுவாக ஓட்ட வேண்டும் ஏனென்றால் நமது டயர்கள் மிதப்பது போன்று நாம் உணர்ந்தால் அதை சரி செய்து கொள்ள வேண்டும் மிதப்பதுபோன்று உணரும் பொழுது பிரேக் உடனே அடித்தல் கூடாது. 



4.நமது டயருக்கு சரியான பிரஷர் இருக்கின்றதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். இதனை செக்கப் செய்து விட்டு பயணத்தை தொடர வேண்டும்.


5. கார்கள் மழை நேரங்களில் மண் பாதையில் ஓட்டும் பொழுது மண்ணில் புதைய வாய்ப்பு உள்ளது அதனால் மழை நேரங்களில் பகுதிகளில் போவதை தவிர்ப்பது நல்லது.

கருத்துரையிடுக