டாடா கார்களை ஏன் இந்தியர்கள் விரும்புகின்றனர்

டாடா கார்களை ஏன் இந்தியர்கள் விரும்புகின்றனர்

 டாடா கார் வரலாறு

 முந்தைய காலகட்டத்தில் மொபைல் போன் என்று எடுத்துக்கொண்டால் நோக்கியா என்று அந்தக் கம்பெனிகளின் மீது இந்திய மக்கள் பெரிதும் நம்பிக்கொண்டு இருந்தனர்.


பைக் என்று எடுத்துக்கொண்டால் ஹீரோ ஹோண்டா மிகப்பெரிய வரவேற்பை கொண்டது, எனவே ஹீரோ ஹோண்டா மாருதி சுசுகி இந்திய கார் சந்தையில் தனக்கென்று ஒரு இடத்தை பறித்து வைத்துக் கொண்டது.

எனினும் மக்கள் அடுத்தடுத்து சிறந்த கார்களை தயாரிக்கும் நிறுவனங்களை வரவேற்றுக் கொண்டு தான் இருந்தது. 


இந்த சமயத்தில் டாட்டா தனது நிறுவனத்தின் கார்களை வலிமையாகவும் அழகாகவும் கட்டமைத்துக் கொண்டிருந்தது. மக்கள் நாளடைவில் டாடா கார்களின் மகத்துவத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். 

டிசம்பர் 30, 1998 அன்று இந்திய நிறுவனமான டாடா இண்டிகா வடிவமைத்த முதல் காருடன் தொடங்கியது ..


நல்ல விலையில் மிகவும் வலிமையான உடல் மற்றும் நவீன அம்சங்கள், விரைவில் இண்டிகா சிறப்பாக செயல்பட்டது.

பின்னர் இண்டிகோ, சுமோ, சுமோ கிராண்டே, சஃபாரி, சஃபாரி புயல் ஆகியவை இந்திய கார் சந்தையில் பெரும் இருப்பைக் காட்டத் தொடங்கின.


 டாட்டா தயாரிப்பில் சுமோ கிராண்டி போன்ற கார்கள் விற்பனையில் தோல்வியுற்றாலும் டாட்டா தொடர்ந்து இந்திய சந்தையில் தனது பாதையை பயணித்துக் கொண்டிருந்தது. 


 அதே சமயத்தில் டாடா நானோ அதிகளவில் விற்பனையாக தொடங்கியது இந்திய சந்தையில், ஆனால் ரத்தன் டாட்டா எதிர்பார்த்த அளவிற்கு இல்லை மேலும் அவர் டாடா நானோவை விலை மலிவான கார் என்று அறிவித்ததை வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார். 


 இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்கள் டாடா நிறுவனம், மாருதி சுசுகி நிறுவனத்தின் முன்னாள் உயரதிகாரி  மயங்க் பரிக்கை, டாட்டா நிறுவனத்தின் விற்பனை வணிக பிரிவிற்கு அதிகாரியாக பணி அமர்வு 2014 ல் செய்தனர். 

அப்போதுதான் அவர் புரிந்து கொண்டார் முன்பு இருந்த டாடா கார்களின் டேஷ்போர்டு கள் அனைத்தும் ஒரே போல இருந்தது. இவர் பதவி ஏற்ற பின்பு தயாரித்த அனைத்து டாட்டா கார்களும் அதன் டேஷ் போர்டுகளில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. 


இந்தியாவின் மிகச் சிறந்த பாதுகாப்பான கார்களை தயாரித்தனர் எடுத்துக்காட்டாக

Nexon, Altoroz, Tigor, Tiago, Bolt, Harrier.. இவ்வகையான கார்களை சொல்லலாம். 


 தற்போது டாட்டா டியாகோ நல்ல சந்தை மதிப்பைப் பெற்றுள்ளது மற்றும் டாடா நிறுவனம் தற்போது தன் விளையாட்டை ஆரம்பித்துள்ளது.


கருத்துரையிடுக