இனி பைக் கார் வாங்கினால் வரி கட்ட தேவையில்லை தமிழக அரசின் புதிய திட்டம் tamil24cars

 இனி பைக் கார் வாங்கினால் வரி கட்ட தேவையில்லை 

வாகனங்களில் இருந்து வரும் புகை காட்டினை மாசுபாடு அடைய செய்கிறது இதனால் மத்திய அரசு வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை மாசுகளை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்தது.


 தமிழக அரசும் தற்போது தன்னுடைய  பங்கிற்கு காற்று மாசுபாட்டை குறைக்க புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. காற்று மாசுபாட்டை குறைக்க தமிழக அரசு எலக்ட்ரிக் ரக வாகனங்களை வாங்குவோருக்கு அதிக சலுகைகளை வழங்க உள்ளது. என்ன சிறப்பு சலுகை என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்


 காற்று மாசுபாடு குறைக்க தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. 2019 ஆம் வருடம் தமிழக அரசு மின்சார வாகன கொள்கைகள் என்ற அரசாணையை தயார் செய்தனர். 


இந்த அரசாணையின் மூலம் எலக்ட்ரிக் ரக வாகனங்கள் உற்பத்தியாளர்கள் மின்சார ரக வாகனங்களின் உதிரிபாகங்கள் தயாரிப்பவர்கள், பேட்டரி மின் மற்றும் உபகரணங்கள் உற்பத்தி செய்த அனைவருக்கும் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி வந்தது.

உதாரணமாக 50 கோடி முதலீடு செய்து ஐம்பது பணியாளர்களுக்கு மேல் வேலை வழங்கிவந்த அனைத்து மின்சார வாகனம் மற்றும் அதை சார்ந்த பிற பல்வேறு வகையான நிறுவனங்களுக்கும் பல்வேறு தரப்பட்ட சலுகைகளை வழங்கி வந்தது தமிழக அரசு

 தற்போது தமிழக அரசு ஒரு அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. மின்சார இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம், கனரக வாகனங்கள் வாங்கும் நபர்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ளது.

 எனவே இனி நீங்கள் மின்சார வாகனம் வாங்கினால் TAX செலுத்த வேண்டிய அவசியமில்லை.

 நீங்கள்  180CC பைக் வாங்குகிறீர்கள் என்றால் கிட்டத்தட்ட வரி மட்டும் 10000 வரை செலுத்த வேண்டி இருக்கும் ஆனால் தற்போது நீங்கள் வாகனம் வாங்கினால் அந்த 10,000 வரி செலுத்த வேண்டியதில்லை. இதைச் சலுகை எலக்ட்ரிக் ரக கார்கள் கனரக வாகனங்களுக்கும் பொருந்தும்.

 இந்தச் சலுகை எந்த வருடம் வரை இருக்கும்

 மின்சார ரக வாகனங்களுக்கு வரி விலக்கு என்பது வருகிற 2022 வருடம் வரை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


 இதன் மூலம் டீசல் மற்றும் பெட்ரோல் ரக வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து மின்சார ரக வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள், புகை மாசுபாடும் ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும் என தமிழக அரசும் இந்த சலுகையை அறிவித்துள்ளது.

 நீங்களும் வாகனம் வாங்க விரும்பினால் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை வாங்குவதை தவிர்த்து மின்சார அரச வாகனங்களை வாங்கி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சேமிப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

 எனவே இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு நாமும் எலக்ட்ரிக் ரக வாகனங்களை வாங்க தயாராகலாம்.
கருத்துரையிடுக