கார் வச்சிருந்தும் இது தெரியவில்லை என்றால் ஆபத்து?தமிழ்24 கார்ஸ்

கார் வச்சிருந்தும் இது தெரியவில்லை என்றால் ஆபத்து?

      என்ஜின் ஆயுள் காலம் என்பது என்ஜினில் ஊற்றப்படும் ஆயுலைப் பொருத்தே அமைகின்றது.

என்ஜின் சரியாக இயங்குவதற்கு முக்கிய காரணம் ஆயில். எஞ்சினில் ஏற்படும் உராய்வு, வெப்பம் அதிகரித்தல் போன்றவற்றை குறைப்பதற்கு தான் ஆயில் தேவைப்படுகின்றது.

     என்ஜின் ஆயில் சரியான முறையில் செயல்படவில்லை என்றால் மிக விரைவில் என்ஜின் பழுதாகிவிடும்.


      என்ஜின் ஆயில் என்பது சாதாரண ஆயில் மட்டும் இல்லை அதனுள் பலவகையான கெமிக்கல் சேர்க்கப்பட்டுள்ளது.

என்ஜின் ஆயில் கிரேடு எதற்காக?

 இன்ஜின் ஆயில் 80 % ஆயில் இருக்கும் 20% கெமிக்கல் கலந்திருக்கும்.

என்ஜின் ஆயில் விஸ்காசிட்டி என்றால் என்ன?

பொதுவாக ஆயிலை விஸ்காசிட்டி கொண்டு அளவிடுகின்றன. அதாவது அதனுடைய வழவழப்புத் தன்மை பொருத்து அமைகின்றது. இன்ஜினின் வழவழப்புத் தன்மை எவ்வளவு நாள் இருக்கின்றது என்பதை காரின் என்ஜினின் வெப்பத்தைத் தாங்கி இருக்கின்றது என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்

எஞ்சின் ஆயிலை அடிக்கடி மாற்றினால் நல்லதா?

எஞ்சின் ஆறு மாதத்திற்கு ஒருமுறை சரி செய்ய வேண்டும் அப்படி செய்ய முடியவில்லை என்றால் 10,000 கிலோ மீட்டர் ஓடியபின் ஆயிலை மாற்ற வேண்டும்.

எந்த என்ஜின் ஆயில் சிறந்தது?

முதல் இருபதாயிரம் கிலோமீட்டர் வரைக்கும் சின்தடிக் ஆயில் யூஸ் பண்ணுவது நல்லது அதன்பின் காருக்கு ஏற்றார்போல் சிந்தெடிக் ஆயில் யூஸ் பண்ணிக்கொள்ளலாம்.

இப்பொழுது வருகின்ற கார் அனைத்திற்கும் சிந்தடிக் ஆயில் சிறந்தது. சிந்தடிக் ஆயில் பருவ காலங்களுக்கு ஏற்ப மாறிக் கொள்ளும் வெப்ப காலங்களில் ஸ்டேபிள் ஆகவும் குளிர்காலங்களில் லிக்யூட் ஆகவும் மாறிக் கொள்ளும்.

என்ஜின் ஆயிலை கவனிக்காமல் விட்டால்?

என்ஜின் ஆயில் தனது வழவழப்புத் தன்மையை இழந்து  விட்டாலும் ஆயில் அளவு குறைந்து விட்டாலும் வெப்பம் காரில் அதிகரிக்கும். வெப்பம் அதிகரிப்பதன் காரணமாக எஞ்சின் பழுதாகிவிடும்.




கருத்துரையிடுக