கார்களில் எலி தொல்லையினால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க சில டிப்ஸ்

 பொதுவாக பல லட்ச ரூபாய் செலவு பண்ணி வாங்கும் கார்களில் அனைவருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை என்றால் இந்த எலி தொல்லை தான்.


 பெருநகரங்களில் சாலை ஓரங்களிலும் வாகன நெரிசல்களிலும் நமது கார்களை பார்க்கிங் செய்வதால் எலிகள் நமது இஞ்சின் பகுதிகளிலுள்ள வயர்கள் டியூப் சிலநேரம் அனைத்தினையும் சேதப்படுத்தி இன்ஜினில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி அதிக செலவிற்கு வழிவகுக்கிறது.



 இதனை நாம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து இந்த எலிகளை காரின் பக்கம் வரவிடாமல் தடுக்கலாம்.

 எளிதில் கிடைக்கும் எலியை விரட்டும் சில பொருட்கள்

 1.  மிளகு அல்லது மிளகு பொடி

 


நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மிளகு அல்லது மிளகு பொடியை எடுத்து ஒரு துணியில் கட்டி இன்ஜின் பகுதியில் ஒரு ஓரமாக தொங்கவிட்டால் எலி வராமல் இருக்கும்.


2.  நாட்டு புகையிலை

 


புகையிலை நமக்கு மட்டும் பகையில்லை எலிகளுக்கும் பகைதான் இந்த நாட்டு புகையிலையை ஒரு நூலில் கட்டி இன்ஜின் பாகத்தில் கட்டி தொங்க விட வேண்டும் இந்த வாசனைக்கு எஞ்சின் பக்கம் வரவே வராது இரண்டிலிருந்து மூன்று வாரம் வரை இந்த வாசனை இருக்கும் அதற்கு மேல் திரும்ப புகையிலையை வாங்கி கட்டி தொங்கவிட வேண்டும். புகையிலை நாட்டு கடைகளில் கிடைக்கவில்லை என்றால் சுருட்டு வாங்கி தொங்கவிடலாம்.


3. நாப்தலின்

 


நாப்தலின் என்பது வீட்டில் நமது டிரஸ்களை வாசனையாக வைத்திருக்க உபயோகப்படுத்தப்படும் இந்த இந்த திரவியத்தை ஒரு காட்டன் துணியில் தொங்க விட்டாள் எலி வரவே வராது.


4. புதினா மற்றும் எருக்கன் செடி

 


மேற்கண்ட மூன்றும் கிடைக்கவில்லை என்றால் புதினா மற்றும் எருக்கன் செடி இவை இரண்டையும் வீட்டின் கார் பார்க்கிங் இடங்களில் வளர்க்கவும்.


5.  மூக்குப்பொடி

 


மூக்கு பொடி டப்பா வாங்கி அந்த பொடியினை இங்கே இருக்கும் பகுதிகளில் தூவி விடவேண்டும். அப்படி தூவி விடுவதனால் எலி காரின் பின்பகுதியில் வருவதை தவிர்க்கலாம். ஆனால் கார் டிரைவிங் செய்யும் பொழுது சில மணி நேரம் கழித்து இந்த புகையிலை மற்றும் மூக்குப்பொடி கார் உள்ளே வந்து நமக்கு நெடிய ஏற்படுத்தக்கூடும்.


6.  பினாயில்

 


கிராமப்புறங்களில் இருப்பவர்கள் மேற்சொன்னவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம் ஆனால் நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு மற்ற பொருட்களையும் தேடிப் பிடிப்பது கடினம் எனவே பினாயில் கொண்டு கார் பார்க்கிங் ஏரியாவை சுத்தமாக வைத்துக்கொண்டால் எலி வருவதை தவிர்க்கலாம்.


 கடைகளில் கிடைக்கும் எலியை விரட்டும் சில பொருட்கள்

 1.  அல்ட்ராசோனிக்

 


எலிகளுக்கு பிடிக்காத ஒலிகளை எழுப்பும் இந்த கருவி அல்ட்ராசோனிக் எனப்படும். இந்த கருவி வாங்கி இரவு முழுவதும் கார் அருகினில் ஓடவிட்டால் எலிகள் வருவதைத் தவிர்க்கலாம்.

 

 2. வலைகள்

 


எலிகளின் நுழையாதவாறு இந்தியர்களுக்கு என்று வகைகள் உள்ளன இந்த வகை வலைகளை வாங்கி இன்ஜின் பகுதியில் அமைக்கலாம். வாகனத்தினை சர்வீஸ் கொண்டு செல்லும்போது மட்டும் வலைகளை அகற்றி விட்டு திரும்ப வலைகளை அமைத்துக்கொள்ளலாம்.


3.  ஸ்பிரே

 


கார்கள் இன்ஜின் பகுதியில் வராமல் இருப்பதற்காகவே ஸ்பிரே கடைகளில் கிடைக்கிறது. இன்ஜின் பகுதிகளில் ஸ்பிரே செய்தால் எலி வரவே வராது


 


இந்த பதிவில் எலி வராமல் இருக்க சில வழிமுறைகளை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் மேலும் இது போல கார்கள் சம்பந்தப்பட்ட டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தெரிந்துகொள்ள நமது வெப்சைட்டினை பாலோ செய்து கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக