இந்த 18 சேவைக்களுக்கு RTO ஆபீஸ் செல்ல தேவையில்லை

 எல் எல் ஆர் டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட எந்த வேலைக்கும் இனி ஆர்டிஓ ஆபீஸ் போக வேண்டாம்


ஆதார் கார்டை அடிப்படையாகக் கொண்டு பதினெட்டு வகையாக ஆர்டிஓ ஆன்லைன் சேவைகளை மத்திய சாலை போக்குவரத்து

மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர் சி புத்தகத்துடன் ஆதார் இணைத்திருந்தால் இந்த சேவைகளை ஆன்லைன் மூலம் பெறலாம்.


18 சேவைகள் என்னென்ன

 • 1. எல்எல்ஆர்

 • 2. டிரைவிங் லைசன்ஸ் புதுப்பித்தல்
 • 3. சர்வதேச ஓட்டுனர் உரிமத்துக்கு அனுமதி

 • 4. டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ்
 • 5. லைசன்ஸ், ஆர்சியில் முகவரி மாற்றுதல்
 • 6. வாகன உரிமத்தை ஒப்படைத்தல்
 • 7. வாகன பதிவெண் பெறுதல்

 • 8. வாகனத்திற்கு தற்காலிக   பதிவெண்
 • பெறுதல்
 • 9. டூப்ளிகேட் பதிவெண் பெறுதல்
 • 10. என்ஓசி சான்றிதழ் பெறுதல்
 • 11. வாகன ஓனர்ஷிப் மாற்றம் குறித்து அறிவித்தல்
 • 12. வாகனத்தின் உரிமத்தை மாற்ற விண்ணப்பித்தல்

 • 13. ஆர்சி புத்தக முகவரி மாற்றம்
 • 14. தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு புதிய வாகன பதிவெண் பெறுதல்
 • 15. தூதரக அதிகாரிகளுக்கு வாகனத்தை பயன்படுத்த விண்ணப்பித்தல்
 • 16. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற பதிவு செய்தல்

 • 17. வாகனத்தை வாடகைக்கு எடுத்த காலம் முடிந்த பின் ஒப்பந்தம் ரத்து செய்தல்
 • 18. வாகனத்தை வாடகைக்கு எடுக்க ஒப்பந்தம் பதிவு செய்தல்

இதில் வரும் அனைத்து ஒப்பந்தங்களும் இடைத்தரகர்கள் இல்லாமல் ஆன்லைன் மூலம் செய்ய முடியும்.

கருத்துரையிடுக