Ford has decided to close its plant in Tamil Nadu

 தமிழகத்தில் போர்ட் கார் நிறுவன ஆலையை மூட முடிவு செய்துள்ளது போர்டு நிறுவனம்



Ford அறிமுகம் 

 அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனம், 1994இல் இந்தியாவில் போர்டு நிறுவனம் தனது கார் தயாரிக்கும் ஆலையை திறந்தது, இந்திய வாகன உற்பத்தி சந்தையில் முதல் முதலில் முதலீடு செய்த நிறுவனத்தின் பெயரை போர்டு நிறுவனம் தான் பெற்றது.

 இந்தியாவில் இரண்டு ஆலைகள் 

 இவர்கள் இந்தியாவில் இரண்டு ஆலைகளை உருவாக்கினர் ஒன்று சென்னை அருகில் மறைமலைநகரில் ஓர் ஆலையையும், குஜராத்தில் சனந்தில் ஆலையையும் திறந்து தனது நிறுவனத்தை விரிவுபடுத்தியது

 இந்தியாவை விட்டு வெளியேற காரணம் 

 ஆனால் தற்போது 4.6 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு இந்த இரண்டு ஆலைகளிலும் திறன் உள்ளது, ஆனால் அதிக உற்பத்தித்திறன் இருந்தும், அதற்கு இணையான விற்பனையை பெறமுடியவில்லை



 எனவே போர்டு நிறுவனம் தனது இந்தியாவில் உள்ள தனது இரண்டு ஆலைகளையும் மூட முடிவு செய்துள்ளது

Ford கார்கள் வாங்க முடியுமா 

 எனினும் ஏற்கனவே வெளிநாடுகளில் போர்டு நிறுவனம் இயங்கிக்கொண்டிருக்கும் இடங்களில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது,

 உதிரிபாகங்கள் நிலைமை 

 இந்தியாவில் போர்டு கார்களின் உதிரிபாகங்கள் அதிக அளவில் கிடைக்க ஏற்பாடு எப்பொழுதுமே செய்யப்படும் என கருத்து தெரிவித்துள்ளது போர்டு நிறுவனம்.

 கார் ஜாம்பவான்கள் 

 கார் ஜாம்பவான்களின் இடையில் போர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து காணாமல் போனது என்று இந்த பதிவில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.



 தங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யவும்.





கருத்துரையிடுக