ஆட்டோமொபைல் துறையில் MGயுடன் இணையும் Reliance Jio நிறுவனம்

ரிலையன்ஸ் நிறுவனம் உதவியை நாடும் MG நிறுவனம்

  இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையை தன் கைவசம் வைத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் நிறுவனமானது, ஆட்டோமொபைல் துறையிலும் MG நிறுவனத்துடன் இணைந்து புதிய சகாப்தம் படைக்க உள்ளது இதைப் பற்றி முழுமையாக இந்த பதிவில் காண்போம்.

       கடந்த வருடங்களில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஜாம்பவானாக சிறந்து விளங்கும் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனம் ஆகும், ஆட்டோமொபைல் துறையில்  MG நிறுவனத்துடன் இணைந்து அதன் தயாரிப்பு கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.


  சீனா நிறுவனமான  MG இந்தியாவில் அதிகமான கார்களை தற்போது விற்பனை செய்ய தொடங்கியுள்ளது,  அதிலும் குறிப்பாக எலக்ட்ரிக் ரக கார்களை தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம் எம் ஜி நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் அடுத்த கட்ட புதிய சகாப்தம் படைக்க முயற்சி செய்கிறது.


 மேலும் இந்த இரு நிறுவனமானது ஏற்கனவே IOT  துறையில் சேர்ந்து தொழில் புரிகிறது, இரண்டாவது முறையாக ஆட்டோமொபைல் துறையில்  MG, RELAINCE இணைய இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.  

   வரும் காலங்களில் ஆட்டோமொபைல் துறையிலும் Reliance மிகப்பெரிய தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. 


முழு வீடியோ பார்க்க 

            

கருத்துரையிடுக